India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கு தினமும் டெமு ரயில் (வண்டி எண் – 06 197) சென்று வருகிறது இதில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை போன்ற பகுதி மக்கள் அதிக அளவில் பயனடைந்து வருகின்றனர் இந்த நிலையில் நாளை 19ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பொறியியல் தொடர்பான பணிகள் நடைபெற உள்ளதால் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.18) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் (பொ)கு. சண்முகநாதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் நீடாமங்கலம், கோட்டூரில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்கல்வியில் சேர, ஜூன் 7-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றார்.
கொரடாச்சேரி போலீசார் நேற்று நடத்திய அதிரடி நடவடிக்கையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விஜய், சிவசங்கர், விக்னேஸ்வரன், தேவா என்கிற ஜெயவல்லவன் , மணிகண்டன், ரஞ்சித் குமார் ஆகிய 6 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்த போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி அதிவேகமாக சென்ற 2 தனியார் பேருந்துகள் விபத்தில் சிக்கியதில் 20 பேர் காயம் அடைந்தனர். முடிகொண்டான் பகுதியில் சென்று கொணடு இருக்கும் போது, அதிகளவு பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதற்காக 2 பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு சென்றது. இதில் ஒரு பேருந்து, அப்பகுதியில் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 18) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில், கச்சனம் பகுதியில் எள் சாகுபடி பயிரை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது கூறுகையில், தற்சமயம் பெய்ந்து வரும் மழையால் நீர் தேங்கியுள்ள இடங்களில் உடனடியாக வடிய வைத்து பருத்தி, எள் பயிர் வரக்கூடிய வேர் அழுகல், வாடல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மாவிரிடி போன்ற பூஞ்சான எதிரி உயிரி பயன்படுத்தலாம் என்றார்
உதவி ஆய்வாளர் முதல் கூடுதல் உதவி கண்காணிப்பாளர் வரை அனைத்து அதிகாரிகளுக்கான புதிய சட்டங்கள் குறித்த 5 நாட்கள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா இன்று திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. நாகப்பட்டினம் கோவிந்தராஜ் நன்னிலம் வீரமணி, ஆகியோர் புதிய சட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், வகுப்பினை பார்வையிட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மன்னார்குடியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், கர்நாடக அரசின் மேகதாது தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மே.21 அன்று திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் நகரங்களில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்மான நகலை தீயிட்டு எரித்து போராட உள்ளோம் என்று கூறினார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி சேர்ந்த மாணவி துர்கா தேவி 10 ஆம் வகுப்பு தேர்வில் 492 மதிப்பெண் எடுத்து மாவட்டத்திலே இரண்டாம் இடம் பெற்றுள்ளார். அவரது இல்லத்திற்கு மின்சார இணைப்பு இல்லை என்ற அறிந்தவுடன் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் மாணவி துர்காதேவி நன்றி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.