Thiruvarur

News June 4, 2024

திருவாரூர்: 4 ஆவது சுற்று முடிவு

image

திருவாரூர் மாட்ட பகுதிகளை உள்ளடக்கிய நாகை தொகுதியின் 4 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், திமுக கூட்டணி வேட்பாளர் வை.செல்வராஜ் 24518 வாக்குகளும், அதிமுக சுர்ஜித்சங்கர் 13855 வாக்குகளும், பாஜக எஸ் ஜி எம் ரமேஷ்4319 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி கார்த்திகா -6977 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தமாக 4 சுற்றுகள் முடிவில் 44642 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ முன்னிலையில் உள்ளது

News June 4, 2024

திருவாரூர்: 2 ஆவது சுற்று நிலவரம்

image

திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியின் 2 ஆவது சுற்று நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, திமுக கூட்டணி வை. செல்வராஜ் 52531 வாக்குகளும், அதிமுக கூட்டணி சுர்ஜித் சங்கர் 29262 வாக்குகளும், பாஜக ரமேஷ் 9276 வாக்குகளும், நாதக கார்த்திகா 13623 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

News June 4, 2024

திருவாரூர்: மூன்றாவது சுற்று நிலவரம்

image

திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டின தொகுதியில் தற்போது மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், திமுக + இ.கம்யூ கூட்டணி 50, 539 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து அதிமுக கூட்டணி 27, 735, நாம் தமிழர் 13, 834, பாஜக 9, 533 வாக்குகளும் பெற்றுள்ளன.

News June 4, 2024

திருவாரூர்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 3, 2024

உங்கள் தொகுதி யாருக்கு?

image

2019இல் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் திமுக – கம்யூனிஸ்ட் கூட்டணியில் போட்டியிட்ட எம். செல்வராஜ் 21.18% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட தாழை ம.சரவணன், 211,353 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் செல்வராஜ், அதிமுக சார்பில் சுர்சித் சங்கரும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்?

News June 3, 2024

மங்களநாதர் ஆலயத்தில் மத்திய அமைச்சர் வழிபாடு

image

குடவாசல் ஒன்றியம் திருச்சிறுகுடி கிராமத்தில் உள்ள மங்களநாதர் சூஷ்மபுரீஸ்வரர் ஆலயத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும் பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் நேற்று மாலை சாமி தரிசனம் செய்தனர். பாஜக திருவாரூர் மாவட்ட முன்னாள் தலைவர் கோட்டூர் ராகவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

News June 3, 2024

திருவாரூர் விவசாயிகள் நீதி கேட்டு பேரணி

image

தமிழ்நாடு அணைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்கவும் கர்நாடக அரசிடம் உரிய தண்ணீரை பெற்று தரவும், மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி வரும் ஜுன் 10ம் தேதி பூம்புகாரில் துவங்கி ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணையில் நீதி கேட்டு பேரணி நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

News June 3, 2024

திருவாரூர்: ரூ.1,000 பெற விண்ணப்பிக்கலாம்!

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று(ஜூன் 3) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் 14 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இங்கு படிப்பை முடித்த 2,588 மாணவிகள் நடப்பு ஆண்டு முதல் அரசின் உத்தரவுப் படி மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவர் என்ற நிலையில், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2024-2025 கல்வியாண்டில் மாணவிகள் அனைவரும் தவறாமல் விண்ணப்பிக்க அறிவிறுத்தியுள்ளார்.

News June 3, 2024

திருவாரூரில் மழை பெய்ய வாய்ப்பு

image

சென்னை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று(ஜூன் 3) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி வரை திருவாரூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 2, 2024

காவலரை மிரட்டிய 3 கைது செய்து நடவடிக்கை

image

மன்னார்குடி வட்டம் காவலரை பணியில் இருக்கும் பொழுது கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். வடபாதி, காந்தி நகரை சேர்ந்த அன்பழகன் மகன் ராமகிருஷ்ணன் (29), அண்ணாதுரை மகன் அமுதக்குமார் (29), மகாலிங்கம் மகன் சிவா (30) ஆகிய 3 கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!