India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குருப் 4 தேர்வு வருகின்ற 09.06.24 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இதற்காக திருவாரூர், குடவாசல், நன்னிலம், நீடாமங்கலம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய 6 மையங்களில் தேர்வு மைய மாற்றம் குறித்து தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க படும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
முத்துப்பேட்டை உதயமார்த்தாண்டபுரம் கால்நடை மருந்தகம் வளாகத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தலைமை மருத்துவர் டாக்டர் மகேந்திரன் மரக்கன்றுகளை நட்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை வாழ்ந்து காட்டுவோம் மகளிர் குழுவை சேர்ந்த மகளிர் குழு உறுப்பினர்கள் உதவியுடன் நடப்பட்டது
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு மாணவர்களுக்கு திட்டம் தொடங்குவது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளின் தாளாளர்கள் கலந்து கொண்டனர். தாளாளர்கள் கலந்து கொள்ளாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு கூட்டத்தில் பங்கேற்றனர்.
2024 மக்களவைத் தேர்தல்:
*சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் – 4,65,044 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் ஜி.கர்சித் சங்கர்- 2,56,087 வாக்குகள்
*நாதக வேட்பாளர் மு.கார்த்திகா – 1,31,294 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் ரமேஷ் – 1,02,173 வாக்குகள்
நாகை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் நேற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திருவாரூர் பகுதிக்கு வருகை தந்த செல்வராஜ் காரில் எழுந்து நின்றவாறு திருவாரூர் நகர் பகுதியில் கூடியிருந்த கையெடுத்து கும்பிட்டபடி நன்றி தெரிவித்தா.ர் இந்நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
நாகை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்ட எஸ் ஜி எம் ரமேஷ் கோவிந்த் ஆகிய எனக்கு வாக்களித்து அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்த நாகை பாராளுமன்ற தொகுதி பொதுமக்கள் அனைவருக்கும் தலை வணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் வை செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய நாகை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தற்பொழுது 17வது சுற்று முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இதில் சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ் 402542, அதிமுக சுர்ஜித் சங்கர் 223206, நாம் தமிழர் கார்த்திகா 116165, பாஜக ரமேஷ் கோவிந்த் 89864 வாக்குகள் பெற்றுள்ளனர். வாக்குகள் அடிப்படையில் முதலிடத்தில் சிபிஐ, 2வது இடத்தில் அதிமுக, 3வது இடத்தில் நாதக உள்ளது.
திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியின் 10 வது சுற்றின் நிலவரப்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். அதன்படி சிபிஐ 249171 வாக்குகளும், அதிமுக 138866 வாக்குகளும், பாஜக 51730 வாக்குகளும், நாதக 71169 வாக்குகளும் பெற்றுள்ளன.
நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் 8வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் 24,588 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 13,635 வாக்குகள் பெற்றுள்ளார். 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8 சுற்றுகள் முடிவில் மொத்தம்
சிபிஐ வேட்பாளர் 19,8079 வாக்குகள் பெற்றுள்ளார். 84,314 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய நாகை பாராளுமன்ற தொகுதியின் 6 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதல் திமுக கூட்டணி வேட்பாளர் செல்வராஜ் 25107 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 14615 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ரமேஷ் கோவித் 5130 வாக்குகளும், நாதக வேட்பாளர் 7117 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தமாக 63278 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்
Sorry, no posts matched your criteria.