India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தினர் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கர்நாடக அரசை கண்டித்து கடந்த 12 ஆம் தேதி பூம்புகாரிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக திருவாரூர் கீழவீதி வரை சென்றனர். இந்த ஊர்வலம் அனுமதியின்றி நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன் உள்பட 40 பேர் மீது திருவாரூர் போலீசார் இன்று (ஜூன் 14) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சர்வதேச இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி சார்பில் இன்று (ஜூன் 14) இரத்த தான முகாம் நடைபெற்றது. இரத்த தானம் செய்தவர்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர், ரெட் கிராஸ் மாநில பொருளாளர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சர்வதேச இரத்த கொடையாளர் தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தாமாக முன்வந்து இரத்த தானம் செய்தார். இரத்த கொடையாளர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஆட்சியரே இரத்த தானம் செய்தது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு படித்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் வெற்றி பெற்றுக் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதல்வர் தலைமையில் சென்னையில் இன்று (ஜூன் 14) பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி மூலமாக பெற்று கொண்டனர்.
தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தினர் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கர்நாடக அரசை கண்டித்து கடந்த 12ம் தேதி பூம்புகாரிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக திருவாரூர் கீழவீதி வரை சென்றனர். இந்த ஊர்வலம் அனுமதியின்றி நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன் உள்பட 40 பேர் மீது திருவாரூர் போலீசார் இன்று (ஜூன் 14) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணா திருமண அரங்கில் ஜூன் 22 ஆம் தேதி நெல் திருவிழா நடைபெறவுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த ஆதிரங்கம் ஜெயராமன் பாதுகாப்பு பண்ணையின் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் நெல் திருவிழாவில் தமிழகத் தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சை, மற்றும் குடும்ப உறுப்பினர் இறப்பிற்கு தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து உதவி தொகை பெற்று வழங்கப்படுகிறது.
அதன்படி இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் 7 காவல் அலுவலர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து ரூ. 2,19,514 ற்கான காசோலையை மாவட்ட எஸ். பி ஜெயக்குமார் வழங்கினார்.
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1433 பசலி ஆண்டிற்கான வருவாய் வசூல் தீர்ப்பாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜா மற்றும் வட்டாசியர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் உழவர் சந்தையில் இன்று காய்கறிகளின் வரத்து குறைவாகவே காணப்பட்டது குறிப்பாக அனைத்து காய்கறிகளின் விலை தற்பொழுது கிடு கிடுவென உயர்ந்து காணப்படுவதால். வியாபாரிகள் முற்றிலும் பாதிப்படைந்தனர் பெருமளவில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக கூறுகின்றனர். இதனால் திருவாரூர் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருவாரூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான அடியக்கமங்கலம், அலிவலம், புலிவலம், கூடூர், விளமல், மாங்குடி, முகுந்தனூர், விஜயபுரம் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் சப்ளை இருக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரிய திருவாரூர் மின்வாரிய அலுவலர் ராஜேந்திரன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.