Thiruvarur

News June 18, 2024

மன்னார்குடி புறவழிச்சாலை – அமைச்சர் ஆலோசனை

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர புறவழிச்சாலை (Ring Road) திட்டத்திற்கான நில எடுப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், முதற்கட்ட சாலைப்பணிகளை விரைந்து துவங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா மன்னார்குடியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

News June 18, 2024

2 மரங்களுக்கு இடையே சிக்கிய பசு மீட்பு

image

முத்துப்பேட்டை, பெத்தவேளாண்கோட்டகம் பாமணி ஆற்றுக்கரை ஓரம் உள்ள 2 தேக்கு மரங்கள் இடையே ஒரு பசு மாடு தலையுடன் சிக்கிக் கொண்டு இரண்டு நாட்களாக உயிருக்கு போராடி தவித்து வந்தது. நேற்று இரவு இதைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த மக்கள் பசுவை மீட்டு அரசு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த டாக்டர் மகேந்திரன் காயம் அடைந்த பசு மாட்டிற்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.

News June 17, 2024

நிதியுதவி பெற கிறிஸ்துவ தேவாலயங்கள் விண்ணப்பிக்கலாம்

image

திருவாரூா் மாவட்டத்தில் நிதியுதவி பெற தேவாலயங்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். அதில், தேவாலயங்களை பழுது பாா்த்தல், கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதுக்கேற்ப மானியத் தொகையை தமிழக அரசு உயா்த்தியுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு,விண்ணப்பிக்கும் தேவாலயங்கள் ஆய்வு செய்யப்பட்டு நிதியுதவி 2 தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்.

News June 17, 2024

மாநில அளவில் கால்பந்து போட்டி

image

முத்துப்பேட்டை கால்பந்து கழகம் சார்பில் மாநில அளவில் முதலாம் ஆண்டு கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 16 அணிகள் பங்கேற்றன. முதல் பரிசை அதிராம்பட்டினம் என்.எப்.சி அணியினர் கைப்பற்றினர். முதல் நான்கு பரிசுகளை டிஎஸ்பி ராஜா, எஸ்டிபிஐ மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், நகர காங்கிரஸ் தலைவர் எம்.சி.சதீஷ்குமார், தீன்முகம்மது , சாமிநாதன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

News June 16, 2024

திருவாரூர்: தீ விபத்தில் 3 பேர் காயம்

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருத்தநாதபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார். வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News June 16, 2024

கடைகளுக்கு விற்பனை முனைய இயந்திரம் வழங்கல்

image

நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு அவா்களது கண் கருவிழி அடையாளத்தின் மூலம் பொருள்கள் விநியோகிக்க, விற்பனை முனைய இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி, மன்னாா்குடியில் நேற்று நடைபெற்றது. மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் கே. மகேஸ்குமாா் தலைமை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் எஸ். மகேஸ் முன்னிலை வகித்தாா்.

News June 16, 2024

மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

image

முத்துப்பேட்டை அடுத்த கீழநம்மங்குறிச்சி மற்றும் மங்கலூர் கிராமத்தில் நேற்று கோமாரி நோய் எதிரான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் டாக்டர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 1000 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தினர். இந்த முகாமில் மூன்று மாத கன்று குட்டிகள் முதல் 8 மாத சினை மாடுகள் வரை அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News June 15, 2024

திருவாரூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தாண்டு ரூ.12 கோடி

image

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை 17,116 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023-2024 நிதியாண்டில் 5,021 நபர்களுக்கு மாதம் ரூ.2,000 வீதம் ரூ.11,92,42,000 பயனாளிகள் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டது. 2024-2025 நிதியாண்டிற்கு ரூ.12,05,04,000 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை ரூ.2,00,84,000 பயனாளிகள் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

News June 15, 2024

ஓடும் பேருந்தில் தவறி விழுந்து கண்டக்டர் படுகாயம்

image

முத்துப்பேட்டை ஆசாத்நகரில் பட்டுக்கோட்டையிலிருந்து தில்லைவிளாகம் நோக்கி சென்ற அரசு பேருந்திலிருந்து நடத்துநர் சீனீவாசன் என்பவர் நேற்றிரவு தவறி விழுந்து படுகாயம் அடைந்தா.உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் டிரைவர், நடத்துநர் கீழே விழுந்தது தெரியாமல் நீண்ட தூரம் ஓட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.

News June 15, 2024

ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலெக்டர் பங்கேற்றார்

image

திருவாரூர் விளமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவ, மாணவியா்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்து கொண்டு ஆசிரியர்கள் இந்த பயிற்சியை திறம்பட பெற்று மாணவர்கள் இவ்வருடம் அதிகளவு தேர்ச்சி பெற செயல்பட வேண்டும் என பேசினார்.

error: Content is protected !!