India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முத்துப்பேட்டைக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி நேற்று வருகை தந்தார். அவருக்கு காங்கிரஸ் சார்பில் நகரத் தலைவர் எம்.சி.சதீஷ்குமார், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெகபர் பாஷா, காங்கிரஸ் சட்டமன்ற பொறுப்பாளர் அன்வர்தீன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர் அப்பொழுது கூட்டணி கட்சியினரும் உடன் இருந்தனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர்மன்றத்தலைவர்
பாத்திமா பசீரா தாஜ் தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினை இன்று சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்தார். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளையும் முழுமையாக வெற்றி பெற்றதற்கு முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய் தீர்வாயம் 1433 பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில், 20 கிராமங்களில் இருந்து பொதுமக்களிடம் 101 மக்கள் பெறப்பட்டது. இந்த நிகழ்வில், வட்டாட்சியர் குருமூர்த்தி மண்டல வட்டாட்சியர் ஓம் சிவகுமாரன் மண்டல துணை வட்டாட்சியர் குப்புசாமி துணை வட்டாட்சியர் கருணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணா தனியார் திருமண அரங்கில் ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாதுகாப்பு பண்ணையின் சார்பில் தேசிய நெல் திருவிழா ஆண்டு தொடரும் நடைபெற்று வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய நெல் திருவிழா ஜூன். 22ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெற உள்ள நிலையில் இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பங்கேற்க உள்ளார்.
திருவாரூர் நாகை நாடாளுமன்ற உறுப்பினராக நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கூட்டணி வேட்பாளர். வை செல்வராஜ், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராஜாவை அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ராயன் உடன் இருந்தார்.
திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி திருக்கோயிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கமலமுனி சித்தருக்கு குரு பூஜை நேற்று மாலை நடைபெற்றது பூஜை செய்த சித்த மருத்துவர்களை திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கே. கலைவாணன் அவர்கள் கெளரவித்து நினைவு பரிசும் வழங்கினார தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ITK என்ற திட்டம் மூலம் பல தன்னார்வலர்கள் இணைந்து மாணவர்களிடம் மாலை நேரங்களில் பாடம் நடத்தி வருகின்றனர். இத்திட்டம் கொரோனா காலங்களில் மாணவர்களிடம் இருந்த கற்றல் இடைவெளியை நீக்க கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் முதல் ITK மையம் செயல்படவில்லை பள்ளி திறந்தும் இன்று வரை வகுப்பு நடத்துவதற்கு அனுமதி வரவில்லை என வருத்தத்துடன் கூறி வருகின்றனர்
முத்துப்பேட்டை அடுத்த கள்ளிக்குடி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று முதல்நாள் பள்ளி திறப்பையொட்டி வட்டார கல்வி அலுவலர் இராமசாமி தேசிய கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்று மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கி பேசினார். இதில், தலைமையாசிரியை வாசுகி, ஆசிரியர் சுரேஷ், மாணவர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் விதவை மறுமணம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அஞ்சலக சேமிப்பு பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் அனக்குடி கிராமத்தில் கால்நடை துறையின் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதனை ஒட்டி கால்நடை துறையின் சார்பில் கால்நடைத்துறை அதிகாரிகளால் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இக்கண்காட்சியில் இயற்கை முறையில் மாடுகளுக்கான மருந்துகள் பற்றி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கண்காட்சி பார்வையிட்டார்.
Sorry, no posts matched your criteria.