Thiruvarur

News June 14, 2024

திருவாரூர்: அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு படித்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் வெற்றி பெற்றுக் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதல்வர் தலைமையில் சென்னையில் இன்று (ஜூன் 14) பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி மூலமாக பெற்று கொண்டனர்.

News June 14, 2024

பி.ஆர்.பாண்டியன் உள்பட 40 பேர் மீது வழக்கு

image

தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தினர் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கர்நாடக அரசை கண்டித்து கடந்த 12ம் தேதி பூம்புகாரிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக திருவாரூர் கீழவீதி வரை சென்றனர். இந்த ஊர்வலம் அனுமதியின்றி நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன் உள்பட 40 பேர் மீது திருவாரூர் போலீசார் இன்று (ஜூன் 14) வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

News June 14, 2024

நெல் திருவிழாவில் அமைச்சர் பங்கேற்பு

image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணா திருமண அரங்கில் ஜூன் 22 ஆம் தேதி நெல் திருவிழா நடைபெறவுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த ஆதிரங்கம் ஜெயராமன் பாதுகாப்பு பண்ணையின் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் நெல் திருவிழாவில் தமிழகத் தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 13, 2024

காவலர்களுக்கு சேமநல உதவித் தொகை

image

திருவாரூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சை, மற்றும் குடும்ப உறுப்பினர் இறப்பிற்கு தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து உதவி தொகை பெற்று வழங்கப்படுகிறது.
அதன்படி இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் 7 காவல் அலுவலர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து ரூ. 2,19,514 ற்கான காசோலையை மாவட்ட எஸ். பி ஜெயக்குமார் வழங்கினார்.

News June 13, 2024

திருவாரூர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

image

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1433 பசலி ஆண்டிற்கான வருவாய் வசூல் தீர்ப்பாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜா மற்றும் வட்டாசியர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

News June 13, 2024

கிடுகிடுவென உயர்ந்த காய்கறிகளின் விலை

image

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் உழவர் சந்தையில் இன்று காய்கறிகளின் வரத்து குறைவாகவே காணப்பட்டது குறிப்பாக அனைத்து காய்கறிகளின் விலை தற்பொழுது கிடு கிடுவென உயர்ந்து காணப்படுவதால். வியாபாரிகள் முற்றிலும் பாதிப்படைந்தனர் பெருமளவில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக கூறுகின்றனர். இதனால் திருவாரூர் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.

News June 13, 2024

திருவாரூர் அருகே ஜூன்15-ல்  மின்தடை

image

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருவாரூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான அடியக்கமங்கலம், அலிவலம், புலிவலம், கூடூர், விளமல், மாங்குடி, முகுந்தனூர், விஜயபுரம் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் சப்ளை இருக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரிய திருவாரூர் மின்வாரிய அலுவலர் ராஜேந்திரன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News June 13, 2024

200 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

image

முத்துப்பேட்டை அடுத்த செருகளத்தூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஶ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் இன்று 200 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. முன்னதாக யாக சாலை பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்று சட்டநாதன் சிவாச்சாரியார் தலைமையில் 15க்கு மேற்பட்ட சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News June 12, 2024

திருவாரூர் எஸ்.பி கடும் எச்சரிக்கை

image

திருவாரூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் அணைத்து உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், சிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.

News June 12, 2024

மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் 

image

திருவாரூர் தபால் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தற்போது இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை உயர்கல்வி மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில அரசுகளே முன்னெடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் – திருவாரூர் மாவட்ட குழு சார்பில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

error: Content is protected !!