India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முத்துப்பேட்டை கால்பந்து கழகம் சார்பில் மாநில அளவில் முதலாம் ஆண்டு கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 16 அணிகள் பங்கேற்றன. முதல் பரிசை அதிராம்பட்டினம் என்.எப்.சி அணியினர் கைப்பற்றினர். முதல் நான்கு பரிசுகளை டிஎஸ்பி ராஜா, எஸ்டிபிஐ மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், நகர காங்கிரஸ் தலைவர் எம்.சி.சதீஷ்குமார், தீன்முகம்மது , சாமிநாதன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருத்தநாதபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார். வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு அவா்களது கண் கருவிழி அடையாளத்தின் மூலம் பொருள்கள் விநியோகிக்க, விற்பனை முனைய இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி, மன்னாா்குடியில் நேற்று நடைபெற்றது. மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் கே. மகேஸ்குமாா் தலைமை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் எஸ். மகேஸ் முன்னிலை வகித்தாா்.
முத்துப்பேட்டை அடுத்த கீழநம்மங்குறிச்சி மற்றும் மங்கலூர் கிராமத்தில் நேற்று கோமாரி நோய் எதிரான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் டாக்டர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 1000 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தினர். இந்த முகாமில் மூன்று மாத கன்று குட்டிகள் முதல் 8 மாத சினை மாடுகள் வரை அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை 17,116 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023-2024 நிதியாண்டில் 5,021 நபர்களுக்கு மாதம் ரூ.2,000 வீதம் ரூ.11,92,42,000 பயனாளிகள் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டது. 2024-2025 நிதியாண்டிற்கு ரூ.12,05,04,000 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை ரூ.2,00,84,000 பயனாளிகள் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
முத்துப்பேட்டை ஆசாத்நகரில் பட்டுக்கோட்டையிலிருந்து தில்லைவிளாகம் நோக்கி சென்ற அரசு பேருந்திலிருந்து நடத்துநர் சீனீவாசன் என்பவர் நேற்றிரவு தவறி விழுந்து படுகாயம் அடைந்தா.உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் டிரைவர், நடத்துநர் கீழே விழுந்தது தெரியாமல் நீண்ட தூரம் ஓட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் விளமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவ, மாணவியா்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்து கொண்டு ஆசிரியர்கள் இந்த பயிற்சியை திறம்பட பெற்று மாணவர்கள் இவ்வருடம் அதிகளவு தேர்ச்சி பெற செயல்பட வேண்டும் என பேசினார்.
தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தினர் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கர்நாடக அரசை கண்டித்து கடந்த 12 ஆம் தேதி பூம்புகாரிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக திருவாரூர் கீழவீதி வரை சென்றனர். இந்த ஊர்வலம் அனுமதியின்றி நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன் உள்பட 40 பேர் மீது திருவாரூர் போலீசார் இன்று (ஜூன் 14) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சர்வதேச இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி சார்பில் இன்று (ஜூன் 14) இரத்த தான முகாம் நடைபெற்றது. இரத்த தானம் செய்தவர்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர், ரெட் கிராஸ் மாநில பொருளாளர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சர்வதேச இரத்த கொடையாளர் தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தாமாக முன்வந்து இரத்த தானம் செய்தார். இரத்த கொடையாளர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஆட்சியரே இரத்த தானம் செய்தது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Sorry, no posts matched your criteria.