India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் கோவை, தேனீ, தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேற்று முதல் கூத்தாநல்லூரில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று காலை கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு கூடியிருந்த தூய்மை பணியாளர்களிடம் அவர்களது பணிச்சூழல் குறித்து கலந்துரையாடினார்.
கும்பகோணம் முழையூரை சேர்ந்தவர் இளையராஜா(30). இவர் நேற்று திருவாரூரில் இருந்து தஞ்சை நோக்கி பைக்கில் கொரடாச்சேரி அடுத்த கமுகக்குடி கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த கோவில்வெண்ணி தனியார் பொறியியல் கல்லுாரி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே இளையராஜா உயிரிழந்தார். தகவல் அறிந்த கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிந்து பிரேத பரிசோதனைக்காக உடலை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினார்.
திருவாரூர் மாவட்டம் அரிச்சந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சுபத்திரயம் களிமங்கலம் இணைப்பு சாலையில் வெள்ளையாற்றின் குறுக்கே சுமார் ரூ.395.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமான பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம் இருந்தனர்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழுவை மறு கட்டமைப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி வரும் 24.08.2024 அன்று அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு கூட்டத்தை சிறப்பாக நடத்திட அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவாரூர் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கான வாராந்திர சிறப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. விரைவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட இருப்பதால், விநாயகர் சிலைகள் அமைக்கும் இடங்கள் குறித்தும், ஊர்வலம் செல்லக்கூடிய பகுதிகள் குறித்தும், காவல் துறையின் உரிய அனுமதி தர அறிவுரை வழங்கினார்.
திருவாரூரில் உள்ள பள்ளிகளில் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் அலுவலர் ஆகியோர் மாதம் தோறும் பார்வையிட்டு ஆய்வு செய்யும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று கொரடாச்சேரி, அத்திசோழமங்கலம் ஊராட்சியில் உள்ள மழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் பார்வையிட்டு, மாணவர்களின் வாசிப்பு திறன், பள்ளியின் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில், நீடாமங்கலம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பாலையூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் ஆணையம் உத்தரவு படி மாவட்டத்தில் வரும் செப்.1ஆம் தேதி முதல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் தரமான புகைப்படம் மாற்றுதல் ஆகியவை இன்று முதல் மேற்கொள்ளலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவாரூரில் தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் நடத்தப்படவுள்ளன. ஆக.25ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், இந்த போட்டிகளை நடத்த 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என இளைஞர் நல விளையாட்டு மேம்பாட்டு குழு அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.