Thiruvarur

News July 17, 2024

மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மிக சுற்றுலா

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். திருவாரூரை சேர்ந்த 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

ரயில் மறியலில் ஈடுபட்ட 476 பேர் கைது

image

தமிழகத்துக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று(ஜூலை.16) பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திருவாரூர், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் ஈடுபட்ட 77 பெண்கள் உட்பட 476 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News July 16, 2024

பேரளம் மாணவர் மாநில அளவில் முதலிடம்

image

சென்னையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி இன்று (ஜூலை.5) இன்று நடைபெற்றது. மாநில அளவிலான இப்போட்டியில் திருவாரூர் மாவட்டம் பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பில் பயிலும் ச.கௌ.பாவேஷ் பிரசன்னா முதலிடம் பெற்று ரூ.50,000 பரிசு தொகை வென்றார் .

News July 16, 2024

பேரணியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்

image

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த 74 லட்சம் ஆன்லைன் தரவுகளை கண்டுபிடித்து தரவும், நலவாரிய பணப்பலன்களை அதிகரித்திடவும், நிலுவையிலுள்ள கேட்பு மனுக்களுக்கு விரைந்து பணப்பலன்களை வழங்கிட வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பாக சிஐடியு மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

News July 16, 2024

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று மாலை 7 மணி வரை தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 7 மணி வரை திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 16, 2024

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

image

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு 35 கிலோ வரை அரிசி பெறுவதற்கான குடும்ப அட்டையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News July 16, 2024

நீங்களும் இனி ரிப்போர்ட்டர் தான்

image

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-யில், உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், அரசியல் நிகழ்வுகள், புகார்கள், கோரிக்கைகள் ஆகியவற்றை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9160322122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News July 16, 2024

திருவாரூர்: 2 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்

image

சோழபுரம்-தஞ்சாவூர் சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக வேதாரண்யம் கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான நீர் உந்துக் குழாயை மாற்றுப் பாதையில் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் 18.07.2024 மற்றும் 19.07.2024 ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யப்படும். எனவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேற்று தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

மன்னார்குடி ரயில் நிலையத்தை ஆய்வு செய்த எஸ்பி

image

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நாளை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று மன்னார்குடி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். மேலும், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

News July 15, 2024

மாநில அளவிலான கபாடி போட்டிகள்

image

வேதாரண்யம் ஆறகாட்டுத்துறையில் மாநில அளவிலான கபாடி போட்டி இன்று (ஜூலை 15) நிறைவடைந்தது. 38 மாவட்டங்களில் இருந்தும் அணிகள் போட்டியில் பங்கேற்றன. இதில் 18 புள்ளிகள் பெற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் உள்ளிக்கோட்டை நண்பர்கள் கபாடி அணி முதல் பரிசாக 30,000 ரூபாயும் ஆறுகாட்டுத்துறை அணி இரண்டாம் இடத்தை பெற்று ரூ.20,000 பணப் பரிசினையும் வென்றது.

error: Content is protected !!