Thiruvarur

News July 19, 2024

திருவாரூர் ஆதிதிராவிட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கு உதவியாக அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், நடப்பு நிதியாண்டிற்கு 24 பேருக்கு ரூ.3,09,30,000 ஒதுக்கப்பட்டு, எந்திரங்கள் வாங்க 35% மூலதன மானியமும் 6 % வட்டி மானியமும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விரும்புவோர் <>https://www.msmeonline.tn.gov.in/<<>> என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News July 18, 2024

திருவாரூர்: மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

அரசுப் பள்ளி மாணவருக்கு ரூ.50,000 பரிசு

image

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சு போட்டியில், திருவாரூர் மாவட்டம், பேரளம் அரசு பள்ளி மாணவர் பாவேஷ் பிரசன்னா முதலிடம் பிடித்தார். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று (ஜூலை.18) முதலிடம் பிடித்த மாணவருக்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் ரூ.50,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

News July 18, 2024

முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் முன்னாள் படை வீரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25/07/2024 அன்று மாலை 4 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். இதில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்ளாக அளிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

TNPSC விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ அல்லது -1 ஆகிய தளங்களில் விண்ணப்பிக்கலாம் நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 18, 2024

திருவாரூர் ஆட்சியர் வெளியிட்ட நற்செய்தி

image

திருவாரூர் ஆட்சியர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக கடந்த 8 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் ஜுலை.28 ஆம் தேதி வரை விண்ணபிக்க இந்திய விமானப்படை கால அவகாசம் வழங்கியுள்ளது. தகுதியுடையவர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 17, 2024

காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம்

image

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில், ரவுடிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினருடன் கலந்தாய்வு கூட்டம் திருவாரூர் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

News July 17, 2024

திருவாரூரில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிட்டத்தக்கது,

News July 17, 2024

CITU சார்பில் ஜூலை 24-ல் கண்டன ஆர்ப்பாட்டம்

image

திருவாரூர் ஏஐடியுசி அலுவலகத்தில் அனைத்து சங்க ஆலோசனைக் கூட்டம் CITU மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயம் செய்யவும், 4 தொழிலாளர் சட்டத்தொகுப்பை வாபஸ் வாங்கவும், 3 குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு வாபஸ் பெற வலியுறுத்தியும் வரும் 24 ஆம் தேதி திருவாரூரில் தபால் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

News July 17, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்கள் குடிநீர் ரத்து

image

சோழபுரம்-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக வேதாரண்யம் கூட்டுக்குடிநீா் திட்ட பிரதான நீா் உந்துக் குழாய், மாற்றுப் பாதையில் பதிக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் வேதாரண்யம் கூட்டுக்குடிநீா் திட்டத்தில் பயன்பெறும் உள்ளாட்சிகளில் ஜூலை 18, 19-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

error: Content is protected !!