Thiruvarur

News July 14, 2024

திருவாரூர் பிராந்திக்கு தடை

image

மன்னார்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மது நிறுவனம் கோல்டன் வாட்ஸ் நம்பர் 1 பிராந்தி என்ற மதுவை உற்பத்தி செய்கிறது. இந்நிலையில், இந்த மது விற்பனைக்கு உகந்தது அல்ல என ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, டாஸ்மாக்கில் இந்த வகை மதுபானம் இருப்பு வைக்கப்பட்டிருந்தால் அதனை சம்பந்தப்பட்ட மதுபான கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என டாஸ்மாக ஊழியர்களுக்கு மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

News July 13, 2024

“அந்தியோதயா ரயிலை வேளாங்கண்ணி வரை இயக்க வேண்டும்”

image

திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் நல சங்க உறுப்பினர் ரா.வெங்கடேசன் திருச்சி தெற்கு ரயில்வே மண்டல மேலாளருக்கு ஓர் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில், அந்தியோதயா இரயில் ரத்து செய்யப்படும் பட்சத்தில் அந்த ரெயிலை குறுகிய காலத்திற்கு மட்டும் திருவாரூரில் இருந்து திருச்செந்தூர் அல்லது வேளாங்கண்ணி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News July 13, 2024

திருவாரூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறையில் தேசிய சுகாதார திட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதில் மருத்துவர், செவிலியர், பிசியோதெரபிஸ்ட், ஓட்டுநர் ஆகிய பதவிகள் காலியாக உள்ளன. தகுதி உள்ளவர்கள் 15.07.2024 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

News July 13, 2024

திருவாரூர் எம்.பியிடம் கோரிக்கை மனு

image

திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மன்னார்குடியில் மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில், நாகை எம். பி செல்வராஜ் கலந்து கொண்டார். இதில், “அனைத்து வகை மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்; வீடுகளுக்கு வசூலிக்கப்படும் மின் கட்டணத்தையே மருந்து கடைகளுக்கும் விதிக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய தீர்மானத்தை எம்.பி யிடம் வழங்கினர்.

News July 13, 2024

திருவாரூரில் உலகம் மக்கள் தொகை தின பேரணி

image

திருவாரூரில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நேற்று உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கலெக்டர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து உலக மக்கள் தொகை தின உறுதி மொழியினை கல்லூரி மாணவ மாணவியர் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் துணை இயக்குனர் உமா, நகர மன்ற தலைவர் புவனப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News July 13, 2024

திருவாரூர்: ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

image

திருத்துறைப்பூண்டி, தகரவெளி கிராமத்தில் புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. மன்னார்குடியில் உள்ள இக்கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதையறிந்த நாகை இந்த அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், திருவாரூர் துணை ஆணையர் ராமு, தனி தாசில்தார் லட்சுமி பிரபா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலத்தை அதிரடியாக மீட்டனர்.

News July 12, 2024

அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை சனிக்கிழமை வேலை நாள் என அறிவித்திருந்த நிலையில், தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலக செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இதனை மாணவர்களின் பெற்றோர்களுக்கு அலைபேசி மூலமாக தலைமை ஆசிரியர்கள் உதவி ஆசிரியர்கள் கூறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

காவலர்களுக்கான உணவகத்தை திறந்து வைத்தார் எஸ் பி

image

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் உணவகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று திறந்து வைத்தார். காவலர்கள் பணி நிமித்தமாக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் அதிகாரிகளுக்கு தரமான உணவுகள் கிடைப்பதில்லை. எனவே காவலர் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

News July 12, 2024

திருவாரூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி

image

திருவாரூர் மாவட்டத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருகின்ற 21அம் தேதி காலை 9 மணி அளவில் திருவாரூரில் உள்ள நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிகள் 9, 11, 13, 15, 25 என்ற வயது அடிப்படையில் பிரிவுகளின் படி சதுரங்க போட்டி நடைபெறும் என அதன் ஒருங்கிணைப்பாளர் கொரடாச்சேரி சரவணன் தெரிவித்துள்ளார்.

News July 12, 2024

தேசிய நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டம் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களை விண்ணப்பிக்குமாறு வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது பெறுவதற்காக ஆசிரியர்கள் நேரடியாக http//_lawardstoteacher.education.gov.in என்ற இணையதள முகவரியில் வருகின்ற 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!