India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மன்னாா்குடியை சேர்ந்தவர் முகமது நஸ்முதீன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட, கட்டட ஒப்பந்ததாரா் எம். தனசேகா் என்பவரிடம் பல்வேறு தவணைகளாக ரூ. 21.20 லட்சம் கொடுத்துள்ளாா். பணத்தை பெற்று கொண்ட ஒப்பந்ததாரர் பணிகளை முடிக்காமல் பாதியிலே நிறுத்தியுள்ளார். இந்நிலையில் நஸ்முதீன் தொடர்ந்த வழக்கில் ஒப்பந்ததாரருக்கு ரூ.15.65 லட்சம் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்தது.
கடலூா் பகுதியைச் சோ்ந்த சிவகாமி (31) திருவாரூா் மடப்புரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு ரயிலில் ஊர் திரும்பும் போது பூந்தோட்டத்தில் அவரிடமிருந்து மா்ம நபா் 10 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இதுகுறித்து, விசாரித்த திருவாரூர் ஆர்.பி.எஃப் போலீசார் திருவிடைமருதூரை சோ்ந்த ஞானப்பிரகாஷ் (27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த கோரியும், சமீபத்தில் உயர்த்திய சுங்க வரி கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பழைய பேரூந்து நிலையம் எதிரில் இன்று நடைபெற்றது. இதில் எம்பி வை.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கொரடாச்சேரி அருகே பொதக்குடியை சேர்ந்தவர் அமானுல்லா (70). முட்டை வியாபாரம் செய்து வந்த இவர் நேற்று முன் தினம் இரவு தனது மொபட்டில் முகுந்தனூர் என்ற இடத்தில் முட்டைகளை வாங்கிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலை நோக்கி வந்துள்ளார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் அமானுல்லா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ் பி ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம் பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விநாயகர் சிலை பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அம்மையப்பன் குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமில் நடைபெற்றது. அதில் திருவாரூரை சேர்ந்த 63 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.3 கோடியே 13 லட்சம் மதிப்பில் கல்வி கடனுக்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ வழங்கினார்கள்.
திருவாரூர் அருகே நடைபெற்ற கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது: தமிழக அரசு மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் முன்னோடி வங்கிகள் மூலம் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் பெறுவது குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தவும், விண்ணப்பங்களை பரிசீலித்து கல்வி கடன் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில் அமைந்துள்ள குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாணவர்கள், வங்கி மேலாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு ஊர்வல விவரங்கள் மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கூத்தாநல்லூரில் வரும் 7 மற்றும் 8 ஆம் தேதிகளிலும், திருவாரூரில் 9 ஆம் தேதியன்றும், திருத்துறைப்பூண்டியில் 10 ஆம் தேதியன்றும், முத்துப்பேட்டையில் 14 ஆம் தேதியன்றும், மன்னார்குடியில் 15 ஆம் தேதியன்றும் நடைபெற உள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செப்.14ல் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு 11 டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும் நாளில் டாஸ்மாக் கடைகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மூட ஆணை பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.