India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நாட்டின் சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாரு ஸ்ரீ தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் நேர்முக உதவியாளர் ராஜா மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஐக்கியநாடுகள் சபை ஜூலை 26ம் தேதி அலையாத்தி காடுகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு ஜூலை 26 முதல் அலையாத்தி காடுகள் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.1998 ஆம் ஆண்டு ஜூலை 26 தேதி ஈக்வெடார் நாட்டில் அலையாத்தி காடுகள் உருவாக்க நடத்திய போராட்டத்தில் மாரடைப்பால் இறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் கேகேவ் டேனியல் நானோ நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில், ஊர்க்காவல் படை துணை வட்டார தளபதி பணிக்கு இளங்கலை பட்டப் படிப்பு முடித்த பெண் விண்ணப்பதாரர்கள் வருகிற ஜூலை 31-ஆம் தேதிக்குள் தங்களது சுய விவரத்துடன் கூடிய விண்ணப்பத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ அடிப்படியில் மேற்கொள்ளும் இப்பணிக்கு ஊதியம் ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் விதமாக கலை, விளையாட்டு, ஓவியம், இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சிக்கு உதவும் சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை www.awards.gov.in என்கிற இணையதளம் வாயிலாக விருதினை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாரூ ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் முதுநிலை மாணவர் சேர்க்கை விண்ணப்பம் பதிவு வருகிற 27.04.24 முதல் 07.08.24 வரை நடைபெற உள்ளது. தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 10-ஆம் தேதியும், மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்று, முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 28.08.24 அன்று தொடங்கும் என திருவாரூர் திரு.வி.க கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படவுள்ள குரூப் 2, 2 ஏ தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற ஏதுவாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வரும் 29-ஆம் தேதிக்குள் திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ கேட்டு கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று இருக்கும் பா.பிரியங்காவை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். ஆட்சியர் பிரியங்கா திருத்துறைப்பூண்டி தாலுக்கா, குரும்பல் ஊராட்சியில் அமைந்துள்ள ஆலங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து டிட்டோஜாக் சார்பில் 2000 பேர் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது. திருவாரூரில், நேற்று நடைபெற்ற மறியல் போராட்ட ஆயத்தக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது. 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் கூட்டமைப்பின் மூலம் ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில் சென்னை பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாவட்ட சமூகநலத் துறையின் சார்பாக இலவச எம்பிராய்டரி தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதி உடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் 20 முதல் 40 வயதுடைய மகளிர், ஆண்டு வருமானம் ரூ.72000 க்குள் உள்ளவர்கள் உரிய கல்வி சான்றுகளுடன் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
திருவாரூர் புது காலனி பகுதியைச் சேர்ந்த அமர்நாத் (22), இவர் ஸ்டூடியோவில் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று தனது இருசக்கர வாகனத்தில் சன்னாநல்லூரில் இருந்து திருவாரூர் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழபணங்குடி அருகே லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.