India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் புலிவலம் பகுதி அரசு வீதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று மாவட்ட மேற்பார்வையாளர், முன்னாள் ஆட்சியர் நிர்மல்ராஜ் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூ ஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொருட்கள் இருப்பு விவரம் குறித்த பதிவேடு, பொருட்கள் தரம் குறித்து கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் ஐஏஎஸ் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ இருவரும் திடீர் ஆய்வு செய்தனர்.
சம்யுக்த கிசான் மோர்சா சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், MS.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரை அமல்படுத்த வேண்டும், புதிய மின்சார சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும், மரபணு மாற்று விதைகளை அனுமதிக்க கூடாது என கேட்டுக் கொண்டார்.
திருவாரூர் கலெக்டர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து கல்லணை நேற்றைய தினம் திறக்கப்பட்டது. இந்த நீரை கொண்டு விவசாயிகள் யாரும் புதிதாக குறுவை சாகுபடி பணிகளை தொடங்க வேண்டாம். மேலும் சம்பா சாகுபடியை ஆகஸ்ட் 2-ஆவது வாரம் தொடங்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். சம்பாவுக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் எஸ்.பி. ஜெயக்குமார் இன்று சிறப்புரையாற்றினார். இதில் போதைப் பொருள் பயன்படுத்தக்கூடாது, செல்லிடப்பேசிகளை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், சைபர் குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும் போன்ற பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். இதில் தலைமை ஆசிரியர் தன்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டை சித்தாலத்தூர் வடக்கு தெருவில் உள்ள ராஜேந்திரன், வினோத், வெள்ளையன், துரைராஜன் ஆகியோரின் கூரைவீடு இன்று மூங்கில் மரத்தில் வைத்த தீ பரவி விபத்து ஏற்பட்டு எரிந்து சாம்பலாகியது. இதில் 1.50 லட்சம் பணம், 10 பவுன் நகைகள், கட்டில், பிரோ பிரிஜ், டிவி உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி நாசமானது. இதையடுத்து எடையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரவுடிகள் நடவடிக்கை குறித்து தொடர் கண்காணிப்பில் இருக்குமாறும், போதைப்பொருள் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்திடவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பிரதி வாரம் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புதிதாக மனு கொடுக்க வந்த 32 மனுதாரர்களிடம், மாவட்ட எஸ். பி நேரடியாக புகார் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்தார்.
திருவாரூர் விஜயாபுரம் ரேணுகாதேவி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.67.41கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு திருக்கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மற்றொரு கோவிலான கபிலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.53.30 கோடி மதிப்பிலான நஞ்சை நிலம் மீட்கப்பட்டு திருக்கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் எனத் தெரிவ்க்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.