India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருத்துறைப்பூண்டி காவல் சரகத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தும், திருட்டுப் போன பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்ட திருத்துறைப்பூண்டி DSP சோமசுந்தரத்திற்கு நேற்று தஞ்சாவூர் காவல் சரகத்தில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் டிஜிபி சங்கர் ஜிவால் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கொரடாச்சேரி பகுதியில் சிப்காட் அமைக்கும் பணிகளுக்காக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.
தமிழகத்தின் இன்று 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் கிராமத்தில் பண்ணை சுற்றுலா திட்ட நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியருக்கு இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ மரக்கன்றுகள் வழங்கினார். இந்நிகழ்வில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் செல்வி கீர்த்தனா மணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாக்கம் கொத்தவாசல் ஆகிய பகுதிகளை இணைக்கும் வெட்டாற்று பாலம் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு தொழில் முதலீடு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி. கே. கலைவாணன் எம்எல்ஏ-வை அவரது இல்லத்தில் தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா இன்று நேரில் சந்தித்து திருவாரூர் மாவட்டத்தில் அமையவுள்ள சிப்காட் தொழிற்சாலை குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர்கள் உடனிருந்தனர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆடிப்பெருக்கு விழாவினை சிறப்பாக கொண்டாட நாளை முதல் முதல் 7 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் அன்பு வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி, திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் இன்று 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மன்னார்குடி தலைமை தபால் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
சங்க காலம் முதல் திருவாரூர் ஆன்மிகம் மற்றும் ஆட்சியில் சிறந்து விளங்கும் நகரமாகும். சோழர்களின் 5 தலைநகரங்களில் ஒன்றாக திருவாரூர் விளங்கியது. பாண்டியர்கள், நாயக்கர்கள், விஜயநகர அரசர்கள், மராத்தியர்கள் என பல்வேறு கலாச்சாரங்களின் மையமாக திருவாரூர் திகழ்ந்த திருவாரூரில் தான், மனு நீதி சோழன் தன் மகனை தேரில் இட்டு கொன்று பசுவிற்கு நீதி வழங்கினார். திருவாரூர் குறித்து மேலும் நீங்கள் அறிந்தது என்ன?
வலங்கைமான் அருகே சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது வயலில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான சோலார் பேனலை கடந்த 14-ஆம் தேதி மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சரவணன் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணை நடத்திய போலீசார் அணியமங்கலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்து மறைத்து வைத்திருந்த 8 சோலார் பேனல்களை மீட்டனர்.
Sorry, no posts matched your criteria.