India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முத்துப்பேட்டை சித்தாலத்தூர் வடக்கு தெருவில் உள்ள ராஜேந்திரன், வினோத், வெள்ளையன், துரைராஜன் ஆகியோரின் கூரைவீடு இன்று மூங்கில் மரத்தில் வைத்த தீ பரவி விபத்து ஏற்பட்டு எரிந்து சாம்பலாகியது. இதில் 1.50 லட்சம் பணம், 10 பவுன் நகைகள், கட்டில், பிரோ பிரிஜ், டிவி உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி நாசமானது. இதையடுத்து எடையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரவுடிகள் நடவடிக்கை குறித்து தொடர் கண்காணிப்பில் இருக்குமாறும், போதைப்பொருள் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்திடவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பிரதி வாரம் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புதிதாக மனு கொடுக்க வந்த 32 மனுதாரர்களிடம், மாவட்ட எஸ். பி நேரடியாக புகார் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்தார்.
திருவாரூர் விஜயாபுரம் ரேணுகாதேவி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.67.41கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு திருக்கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மற்றொரு கோவிலான கபிலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.53.30 கோடி மதிப்பிலான நஞ்சை நிலம் மீட்கப்பட்டு திருக்கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் எனத் தெரிவ்க்கப்பட்டுள்ளது.
டெல்டா பகுதிகளில் விவசாயம் மேற்கொள்வதற்காக கல்லணையில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் அரசு துறை அதிகாரிகள் கல்லணை நீர் திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த, கிறித்தவர், இஸ்லாமியர், மற்றும் சீக்கியர் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை மக்களுக்கான, தனிநபர் கடன், சுய உதவிக் குழு கடன், சிறுதொழில் கடன், கைவினைஞர்கள் கடன், கல்வி கடன் ஆகியவற்றை பெற விண்ணப்பிக்கலாம். மேலும், தேவையான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தகவல்கள் பெற்று பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுவதால், திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஆறுகளிலும் அதிகளவில் தண்ணீர் செல்லும். எனவே, தாழ்வான பகுதியில் வசிப்போர், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மேலும், பொதுமக்கள் நீர் நிலைகளில் குளிக்க செல்ல வேண்டாம் எனவும், கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
வடபாதிமங்கலம் அருகே வடகட்டளை அய்யனார் கோயில் திருவிழாவில் கடந்த 29ஆம் தேதி இரவு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. கலைநிகழ்ச்சியின் போது கீழப்பனங்காட்டாங்குடியை சேர்ந்த சரத்குமார் (31), சக்திவேல் (25), அபிமன்யூ (23), பிரவின் 27), ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதை தட்டி கேட்ட வேதையன் (36) என்பவரை நால்வரும் சேர்ந்து தாக்கியதில் காயமடைந்தார். பின்னர் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
மன்னார்குடி பகுதியில் உள்ள வடுவூர் பறவைகள் சரணாலயத்தில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த சரணாலயத்தில் பல்வேறு வகையான பறவைகள் வருகின்றன. ஆகையால் பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்தவும், தண்ணீர் அதிக நாட்கள் தேங்கி இருக்கவும், அரசு நிதி ஒதுக்கீடு செய்து, தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இப்பணிகளை நேற்று தொழில்துறை அமைச்சர் பார்வையிட்டார்.
Sorry, no posts matched your criteria.