Thiruvarur

News August 12, 2024

குழந்தை பெயருடன் பிறப்பு சான்றிதழ்

image

இந்திய பிறப்பு இறப்பு பதிவாளர் அறிவுரையின்படி 1.1.2000க்கு முன்னர் பிறப்பு பதிவு செய்யப்பட்டு 1.1.2000 தேதியிலிருந்து 15 ஆண்டுகள் கடந்தும் பிறப்பு பதிவுகளிலும் பெயரைச்சேர்த்து குழந்தை பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெற டிச.31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை திருவாரூர் மாவட்ட மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.

News August 12, 2024

திருவாரூரில் போக்குவரத்து மாற்றம்

image

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் நகருக்குள் வரும் வாகனங்கள் செல்ல வேண்டிய பாதைகள் குறித்த வரைபடத்தை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது. இதனை பின்பற்றி நகருக்குள் வரும் வாகனங்கள் செல்ல காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதில் இலகுரக வாகனம், கனரக வாகனம், இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு வழி பாதை என தனித்தனியாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஷேர் செய்யவும்

News August 12, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகளை வழங்கிய ஆட்சியர்

image

திருவாரூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மக்களுடன் முதல்வர் முகாம் மூலம் பெறப்பட்ட 20 காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகளை ஆட்சியர் சாருஸ்ரீ இன்று வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் புவனா உடன் இருந்தார்.

News August 12, 2024

நீடாமங்கலத்தில் அமைச்சர் ஆய்வு

image

நீடாமங்கலம் அருகே உள்ள விபி கட்டளை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அதற்கு நிதியினை ஒதுக்கி, அக்கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தினை, தமிழக தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News August 12, 2024

நீடாமங்கலத்தில் அமைச்சர் ஆய்வு

image

நீடாமங்கலம் அருகே உள்ள விபி கட்டளை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அதற்கு நிதியினை ஒதுக்கி, அக்கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தினை, தமிழக தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

News August 12, 2024

திருவாரூர் முன்னாள் அமைச்சர் அழைப்பு

image

திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னால் அமைச்சருமான ஆர்.காமராஜ் அறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளார். அதில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கு இணங்க, திருவாரூர் மாவட்ட அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை திருவாரூர் விளமல் தங்கவேல் திருமண மஹாலில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து அதிமுக உறுப்பினர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

News August 12, 2024

திருவாரூர் பகுதிகளில் நாளை மின் தடை

image

திருவாரூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஆக.13) நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவாரூர் நகரம், விளமல் தெற்கு வீதி, விஜயபுரம், முகந்தனூர், அம்மையப்பன், கொரடாச்சேரி, அத்திக்கடை, அலிவலம், புலிவலம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என திருவாரூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News August 12, 2024

பட்டதாரி இளைஞர்களுக்கு மானியத்துடன் கடனுதவி

image

திருவாரூர் மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற வயது வரம்பு 21 முதல் 40 ஆகும். மேலும், கல்வித் தகுதி என்பது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பட்டதாரிகள் (Agristnet) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 12, 2024

நம்ம திருவாரூரில் மட்டுமே மத்திய பல்கலைக்கழகம்

image

இந்தியாவில் மொத்தம் 56 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில், தமிழ்நாட்டில் ஒரேயொரு மத்திய பல்கலைக்கழகம் நம்ம திருவாருரில்தான் இருக்கிறது. 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் 2009ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால், பல விமர்சனங்களுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டது. 27 துறைகள் கொண்ட இப்பல்கலை., வாயிலாக டெல்டா மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

News August 12, 2024

புறவழிச்சாலையில் பேருந்துகளை இயக்க கோரிக்கை

image

தஞ்சையில் இருந்து திருவாரூர் வழியாக நாகை வரையிலான விரைவு பேருந்துகள் புறவழிச்சாலை வழியாக பேருந்துகள் இயக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொலைதூரம் பயணிக்கும் மக்களின் சுமையை குறைக்க சுமார் 15 கி.மீ தூரம் குறைவதுடன், 2 மணி நேரத்திற்குள் செல்லும் நிலை உருவாகும். அதனோடு, கூடுதலாக ஏ.சி. பேருந்துகளும் இயக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

error: Content is protected !!