India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்
நன்னிலம் அடுத்த அதம்பார், வேலங்குடி ஆகிய மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதியான மருதவஞ்சேரி, கடகம்பாடி, பாகசாலை, விலாகம், அதம்பார், எரவாஞ்சேரி, ஸ்ரீவாஞ்சியம், திருவிழிமிழலை, வேலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பிரபாகர் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி திமுக கட்சி அலுவலகத்தில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு திமுக மாவட்ட செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன், பேரூர் செயலாளர் கலைவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெற உள்ளது. எனவே அந்த வழியாக தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் திருவாரூரிலிருந்து திருச்சி நீடாமங்கலம் வழியாகச் செல்லும் வகையில் வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் யாரும் இந்த வழியை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 10 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு ஒருவர் வீதம், வட்டார வள பயிற்றுநர்கள் பணியிடங்களுக்கு தகுதியுடைய சுய உதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 8-ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.
மன்னார்குடியில் இன்று வேளாண் விலை பொருட்களுக்கான, ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கத்தினை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தொடங்கி வைத்தார். அதனை அடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த வேளாண்மை கண்காட்சியினை பார்வையிட்டார். இந்நிகழ்வில் விவசாயிகள் மற்றும் அரசு துறை அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கத்தை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை, வேளாண் இணை இயக்குனர் வணிகம் சாருமதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், வேளாண் உற்பத்தியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் என ஏராளமான பங்கேற்றனர்.
முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (37). கூலி தொழிலாளியான இவர், நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க, அதே பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்துக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காரைக்குடியில் இருந்து திருவாரூர் சென்ற பயணிகள் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் 4-ஆம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் சாருஸ்ரீ கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்ததில் இதுவரை மொத்தம் 3,98,148 பேர் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பயனடைந்துள்ளனர் என்றார் அவர்.
Sorry, no posts matched your criteria.