India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முதலமைச்சரால் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் கோவையில் தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து, திருவாரூர் மாவட்டம், மஞ்சக்குடியில் தமிழ்புதல்வன் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கான மின்னனு அட்டையினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கே.கலைவாணன் இன்று வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார், உத்தரவின் படி 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் மோப்ப நாய் படை பிரிவினர் இன்று (14.08.2024) பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடை வீதிகள், கோவில்கள் ஆகிய இடங்களில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.
உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இந்திய நாட்டின் 78-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம் நடைபெறும் என்றும், இதில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். கிராம சபை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர்கள் மும்மரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. SHARE NOW!
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் இன்று (ஆகஸ்ட்.14) திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளிடையே நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய காவல் கண்காணிப்பாளர், மாணவர்கள் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், போதை பொருட்களில் இருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி பேசினார்.
கோட்டூர் அருகே சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் கமலேஷ். இவர் வயலில் மாடு மேய்ச்சலுக்கு சென்ற ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோட்டூர் இன்ஸ்பெக்டர் சிவகுமார், விக்கிரபாண்டியன் சப்.இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச் செல்வி, கல்விக்கரசன் ஆகியோர் நேற்று விசாரணை நடத்தி கமலேசை கைது செய்தனர்
திருவாரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு நாளை (ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை தினமாகும். இதனை மீறி மது விற்பனை நடப்பது தெரியவந்தால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
மன்னார்குடி பகுதியை சேர்ந்த சந்தானம் என்பவர் தனது மனைவியின் சிகிச்சைக்காக மருத்துவ காப்பீட்டுத் தொகையை கோரியபோது, அதை தர மறுத்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது மன்னார்குடி நுகர்வோர் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடர்ந்தார். இதன் வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.11.30 லட்சம் வழங்க திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் அஇஅதிமுக மத்திய மாவட்ட கழக செயலாளர், ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் மா. சேகர், மாமனார் இரா.வேலு மறைவையொட்டி அவரின் திருஉருவ படத்தை திறந்து வைத்து தமிழ்நாடு அரசு முன்னாள் உணவு துறை அமைச்சருமான நன்னிலம் தொகுதி எம்எல்ஏவுமான இரா. காமராஜ், மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் போன்ற சமுதாய சார்ந்த அமைப்புகளில் ஆகஸ்ட் 15ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இந்த சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஆண்டு பொது குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.