Thiruvarur

News August 16, 2024

திருவாரூரில் டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் டிஎஸ்பி ஆக இருந்த சரவணகுமார் சென்னை சிவில் சப்ளை டிஎஸ்பி ஆகவும், திருவாரூர் மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த பாஸ்கரன் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி ஆகவும், திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி ஆக இருந்த சோமசுந்தரம் தஞ்சை நகர டிஎஸ்பி ஆகவும் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

News August 16, 2024

திருவாரூரில் பரவும் வதந்தி SHARE பண்ணுங்க

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மகளிர் உரிமை தொகை பெறுவது தொடர்பான முகாம் நடைபெறுவதாக போலியான தகவல்கள் பரவி வருகிறது. இந்த செய்தி முற்றிலும் தவறானது. எனவே, பொது மக்கள் யாரும் இந்த செய்தியை நம்ப வேண்டாம். இதை SHARE செய்யவும்.

News August 16, 2024

திருவாரூர் மாவட்ட தொழில் முதலீட்டாளர்களுக்கு அறிவிப்பு

image

தஞ்சாவூரில் வருகின்ற ஆக.19 முதல் செப்.6 வரை தொழில் முதலீடு தொடர்பான MSME முகாம் நடைபெற உள்ளது. தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். முகாம் நாட்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பித்தால் ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொழில் துவங்குவதற்கான கடன் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

News August 16, 2024

திருவாரூரில் மகளிர் உரிமை தொகை பெற சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகையை இதுவரை பெறாதவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட்.17 (சனிக்கிழமை) முதல் ஆகஸ்ட்.20 (செவ்வாய்க்கிழமை) வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பெண்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிக்கலாம்

image

ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முஸ்லீம் பெருமக்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் வழியாகவும் அல்லது ‘HAJ SUVIDHA’ செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் செப்டம்பர் 09.09.24 (திங்கட்கிழமை) என திருவாரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை தலைவர் தெரிவித்துள்ளார். SHARE NOW!

News August 16, 2024

திருவாரூர் பல்கலைக்கழகம் தரவரிசையில் முன்னேற்றம்

image

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுந்தந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வாய்த்த பிறகு துணைவேந்தர் கிருஷ்ணன் கூறியதாவது: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துக்கு அகில இந்திய மதிப்பீடு மற்றும் அங்கீகார நிறுவனத்தால் ‘ஏ’ பிளஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலிலும் தமிழ் நாடு மத்திய பல்கலைக்கழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றார் அவர்.

News August 15, 2024

நீதிமன்ற காவலருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்

image

முத்துப்பேட்டை காவல் நிலைய நீதிமன்ற காவலர் இளஞ்செழியன் நீதிமன்ற காவல் பணியை சிறப்பாக செய்ததற்காக இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாரூ ஸ்ரீ பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். ஆண்டுதோறும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சுதந்திர தினத்தன்று பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கமாகும்.

News August 15, 2024

தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்

image

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திருவாரூர் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை இன்று வழங்கினார். இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News August 15, 2024

திருவாரூர் சிறந்த நகராட்சியாக தேர்வு

image

திருவாரூர் நகராட்சி தமிழகத்தில் சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையி்ல், 78வது சுதந்திர தினத்தில் திருவாரூர் நகராட்சிக்கு சிறப்பு விருதினை முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் வழங்கினார். இதன் பின்னர், இவ்விருதினை பெற பெரும் பங்காற்றிய அனைத்து நகர மன்ற உறுப்பினர்களுக்கு நகர்மன்ற தலைவி புவனப்பிரியா செந்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

News August 15, 2024

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு

image

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டு, சிறப்பிக்க மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!