India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் ஆபத்தான பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் கட்டாயம் உடன் இருக்க வேண்டும். மின் வயரிங் இல்லாத திறந்த வெளிகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அரசால் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் பட்டாசுகள் வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளை திருவாரூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ஓடாசேரி கிராமத்தில் உள்ள மின்மாற்றிகள் பழுது நீக்கும் பணியை மேற்கொண்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் இழப்பீடாக அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (28.10.24 ) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் அதிகாரிகளின் விபரம் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் நடைபெறும் இந்த ரோந்து பணிகளில், பொதுமக்கள் அவசர உதவிக்கு இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.
தீபாவளி பண்டிகைக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம், இதர ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு ரேசன் கடைகள் மூலம் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றும், ஆதார் எண்ணுடன் குடும்ப அட்டை எண் இணைக்கப் பெறாத பயனாளிகளுக்கு தொடர்புடைய விஏஒ மூலம் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி திருவாரூரில் பொதுமக்களை ஏமாற்றுபவர்கள், பணம் பறித்தல், ஆயுதங்களை காட்டி மிரட்டுதல், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு உண்டாகும் வகையில் குற்றப் செயலில் ஈடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்டக் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்
திருவாரூர் எஸ்பி ஜெயகுமார் உத்தரவின் பேரில் பெருகவாழ்ந்தான் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையில் குற்ற செயலில் ஈடுபட்ட முத்துப்பேட்டை தாலுக்கா பாலையூர் கும்பகர்ணன் தெரு ராஜப்பா மகன் ரவுடி அசோக் (எ) அசோக்குமார் (32) என்பவரை கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். ரவுடி அசோக் என்பவர் மீது 7 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூரில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி மணிமாறன் மற்றும் அருணாச்சலம் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவம் அறிந்த உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாருர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம் உட்பட அந்தந்த பகுதி போலீசார் தொடர்ந்து பகல் மற்றும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டதில் 2 நாளில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 82 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்
திருவாருர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையில் கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 23 நபர்கள் கைது செய்து அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனம், 1 நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.