Thiruvarur

News April 26, 2024

தெப்பத் திருவிழா – ஆய்வு செய்த எஸ். பி

image

மன்னார்குடி அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியை நேற்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு, மக்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது மன்னார்குடி டி எஸ் பி உடனிருந்தார்.

News April 26, 2024

“அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல்”

image

திருவாரூா் பனகல் சாலையில் அமைந்துள்ள அதிமுக கட்சியின் நகர அலுவலகத்தில் பொதுமக்களுக்காக நீா் மோா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ், நீா் மோா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோா், பானகம், இளநீா், தா்ப்பூசணி , வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

News April 25, 2024

திருவாரூர்: 4 பேர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்தது

image

முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா. இவரை முன்விரோதம் காரணமாக விளாங்காடு கிராமத்தை சேர்ந்த அபிஷ், பிரதிப், ஆதி, இடும்பாவனம் பாலசுந்தரம், ஆகிய 4 பேர் சேர்ந்து தாக்கி ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றார்.

News April 25, 2024

திருவாரூர் ரயில் சந்திப்பில் இருந்து 5 ரயில்கள்

image

திருவாரூர் திருத்துறைப்பூண்டி ரயில் வழித்தடத்தில் ஐந்து புதிய ரயில் சேவை வரும் 03.05.24 முதல் துவங்கவுள்ளது. அதன்படி திருவாரூர்-திருச்சிராப்பள்ளி, திருவாரூர்-அகஸ்தியம்பள்ளி, திருவாரூர்-காரைக்குடி, திருவாரூர்-விழுப்புரம், திருவாரூர்-பட்டுக்கோட்டை ஆகிய ஐந்து ரயில்கள் தினசரி இயக்கப்படவுள்ளதாக ரயில்வே வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

News April 25, 2024

திருவாரூர்: மாபெரும் கிரிக்கெட் போட்டி

image

திருவாரூர், மன்னார்குடி அருகே உள்ள கருவாக்குறிச்சி கேசிசியின் பதான் பாய்ஸ் நண்பர்கள் சங்கம் சார்பில் முப்பதாம் ஆண்டு மின்னொளி சுழற்கோப்பைக்கான சூப்பர் “8” கிரிக்கெட் போட்டி விழா வரும் 27.04.24 (ஞாயிற்றுக்கிழமை) கருவாக்குறிச்சி அரசினர் மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்துக்கொள்ளுமாறு இளைஞர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

வீச்சரிவாளை காட்டி மிரட்டியவர்கள் கைது

image

திருத்துறைப்பூண்டி அடுத்த வேளூர் பாலத்தடியில் நேற்று வீச்சரிவாளை காட்டி மக்களை மிரட்டிய திருத்துறைப்பூண்டி, கீழத்தெரு, மீனாட்சி வாய்கால் பகுதியை சேர்ந்த அரவிந்த் மற்றும் ஹரிராஜன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், சிறப்பாக செயல்பட்ட போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

News April 25, 2024

திருவாரூர் இவிஎம் இயந்திரம் பார்வையிட்ட வேட்பாளர்

image

திருவாரூர் கடந்த 19.04.24 பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் வாக்களித்த இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தினை நாகை தொகுதி இ.கம்யூ.கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். வேட்பாளருடன் வாக்கு சாவடி முகவர்கள் உடனிருந்தனர்.

News April 25, 2024

திருவாரூர் ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு..!

image

வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை ஆட்டுக்கொல்லி நோய் தாக்கி வருகிறது. இந்த நோயிலிருந்து ஆடுகளை பாதுகாக்க கால்நடை பராமரிப்ப துறையால் வரும் ஏப்.,29 முதல் மாவட்டதில் உள்ள 2.70 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதனை ஆடு வளர்ப்போர் பயன்படுத்தி கொள்ளுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

முதலமைச்சர் விருது பெற இளைஞர்களுக்கு அழைப்பு

image

வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று தமிழக அரசால் வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற மாவட்டத்தில் உள்ள 15 வயது முதல் 35 வயது வரை உள்ள சமூக சேவை செய்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு 04366–290620 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், மே மாதம் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவாரூர் கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

திருவாரூர் உதவி ஆய்வாளருக்கு எஸ்பி அட்வைஸ்

image

திருவாரூர் மாவட்டத்தில் அறிக்கை செய்த பணிபுரிந்து வரும் 19 நேரடி பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு, திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேற்று திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அறிவுரைகளை வழங்கினார். இதில் கூடுதல் கண்காணிப்பாளர் ஏ.பிலிப்ஸ், தனிப்பிரிவு ஆய்வாளர் பி.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.