India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராசி மணலில் தமிழ்நாடு அணைக்கட்ட வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மன்னார்குடி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மதிமுக எம்பி துரை வைகோவை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.
திருவாரூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர் மற்றும் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் மன்னார்குடி ஓன்றியம், 3-ஆம் சேத்தி பஞ்சாயத்து, அண்ணா மலை நகரில் உள்ள ‘மதி சிறகுகள்’ எனும் தொழில் மையத்தில் மிக குறைந்த செலவில் பல்வேறு சேவைகளை பெற்று பயன் பெறலாம். இவ்வாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் ச.சுசோபிதன் அரியலூரில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்று முதல் இடம் பெற்றார். பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மாணவனுக்கு சான்றிதழ் மற்றும் சுழற் கோப்பையை வழங்கி பாராட்டுகள் தெரிவித்தார்.
குடவாசல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7,639 மற்றும் குறைந்த பட்சமாக ரூ.6,809-க்கும் விற்பனையானது. மொத்தத்தில் 43.31 குவிண்டால் பருத்தி ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 158 ரூபாய்க்கு ஏலம் போனது. மேலும் பருத்தியை நன்கு உலர்த்தி எடுத்து வந்து ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மேற்பார்வையாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி உட்கோட்டம் மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மன்னார்குடி பந்தலடி அருகே நேற்று முன்தினம் இரவு நம்பிராஜன் பீர் முகம்மது ஆகிய நண்பர்களோடு பேசிக் கொண்டு இருந்த போது வாய்த்தகராறில், ஜெயநாராயணன் என்பவர் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவ நடந்த இடத்தை நேற்று மாலை நேரில் ஆய்வு செய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் வந்து ஆய்வு செய்தார்.
பேரளம் கோவில் தெரு சுபாஷ் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை சிலர் டாட்டா சுமோவில் திருடி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார். அப்பொழுது அதிலிருந்த ராஜேஷ்கண்ணன், சோலைக்குமரன், வீரமணிகண்டன், இராஜசேகரன், லோகராம் ஆகியோரை கைது செய்த போலீசார், கார் மற்றும் ஆடுகளை பறிமுதல் செய்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
மன்னார்குடி ருக்மணி குளம் தென்கரையில் உள்ள பரமநாயகி அம்மன் கோவிலில் ஆவணி மாத மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஒட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மூலவர் பிரமநாயகம் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. மலர் மாலைகள் சூட்டி சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டது.
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கரீப் பருவம் 2024-25க்கு கிரேடு ‘ஏ’ ரக நெல் ரூ.2450-க்கும், பொது ரக நெல் ரூ.2405-க்கும் கொள்முதல் செய்யப்படும் என திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு மூட்டை நெல்லின் எடை (சாக்கு உட்பட) 40.580 கிலோ இருக்க வேண்டும்.
திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன் ரெயில்வே துறைக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், திருவாரூர் பட்டுக்கோட்டை மெமோ ரயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் 8 மணிக்கு இயக்கப்படும் இந்த ரயிலை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் வழியாக திருச்சி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.