India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
திருவாருர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 26, 27.11.2024 அன்று மழைக்கால விடுமுறை விடப்பட்டது. அதனைஈடு செய்யும் விதமாக 12.04.2025 மற்றும் 19.04.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளும் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட மக்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அரசு உதவி எண்கள் (பாகம்-2). மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04366 – 221003, மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077, விபத்து அவசர வாகன உதவி – 102, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091, பேரிடர் கால உதவி – 1077, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 04366-220510. இதை மறக்காமல் SHARE செய்யவும்!
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு <
திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் நேற்று இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதில் சேந்தமங்கலம் மேலத்தெரு ஊராட்சியில் முருகானந்தம் என்பவருடைய கூரை வீட்டில் மின்னல் தாக்கியதில் வீடு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. மேலும் வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளியான பிரகதீஷ் என்பவருக்கும் முழங்கால் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. குறித்து விக்கிரபாண்டியம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாருர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 26.11.2024, 27.11.2024 அன்று மழைக்கால விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் விதமாக 12.04.2025 மற்றும் 19.04.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளும் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்வு நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள SDAT மைதானத்தில் வரும் ஏப்.20 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இத்தேர்வில் 30.08.2013-க்கு முன் பிறந்த வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 93450 39690, 86103 42089 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். SHARE NOW!
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்களை தற்காலிகமாக மூட அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நாளை (ஏப்.10) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் மொழி பற்றாளரும், பனை பாதுகாவலரும், விவசாயிகளின் குரலாக ஓங்கி ஒலித்தவருமான பாசமிகு தலைவர் குமரி அனந்தன் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு தொலைபேசி எண்கள். மாவட்ட ஆட்சியர் – 9444178000, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 9498110066, தலைமை கல்வி அலுவலகம் – 04366-225903, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் – 04366-226895, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் – 04366-221261, மக்கள் தொடர்பு அலுவலர் – 04366-221352. இந்த தகவலை பிறரும் தெரிந்து கொள்ள மறக்காமல் SHARE செய்யவும்!
Sorry, no posts matched your criteria.