Thiruvarur

News November 19, 2024

மன்னார்குடி அருகே நூதன மோசடி: ஒருவர் கைது

image

மன்னார்குடியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் புகார் அளித்ததன் அடிப்படையில் பெண்களைப் போல் பேசி பல்வேறு நபர்களிடம் ஆன்லைன் வழியே ரூ.1.60 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய அரியலூர் மாவட்டம், பெரிய கிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவரை திருவாரூர் சைபர் கிரைம் காவல் துறையினர் பிரசாந்த் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

News November 18, 2024

திருவாரூர் மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தினை தமிழ் வளர்ச்சித் துறையின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 20 ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

News November 18, 2024

பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் விளைநிலங்களுக்கு மத்திய அரசின் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், மழையின் காரணமாக விவசாயிகளின் நலன் நவம்பர் 30-ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News November 18, 2024

திருவாரூர்: விண்ணப்பிக்க 20 ஆம் தேதி கடைசி நாள்

image

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், அம்பேத்கா் விருது பெற நவ.20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடா் மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டு செய்பவருக்கு, அம்பேத்கா் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை, திருவாரூா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

News November 17, 2024

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் காலை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், நன்னிலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், இன்று (நவ.16) மாலை 4 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 225.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News November 17, 2024

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்ற தடை

image

கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூத்தாநல்லூரில் உள்ள 24 வார்டுகளில் சேகரமாகும் ‘மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறை தடை’ செய்யப்பட்டுள்ளது. இத்தகைய விதிமுறைகளை மீறி எவரேனும் செயல்பட்டால், கட்டணமில்லா தொலைபேசி எண் 14420 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2024

திருவாரூர் வருகை புரியும் குடியரசு தலைவர்

image

திருவாரூருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நவம்பர் 30ஆம் தேதி வருகை தருகிறார். அவர் மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். மேலும் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, விழாவில் சிறப்புரை ஆற்றுகிறார். குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

News November 17, 2024

வேட்டையாடியவருக்கு ரூ.50,000 அபராதம்

image

முத்துப்பேட்டையில் அலையாத்தி காடுகளும், உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயமும் உள்ளது. இங்கு பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறை சார்பில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள் பறவைகளை வேட்டையாடிய விக்னேஷ் என்பவரை கைது செய்து 10 பறவைகளை பறிமுதல் செய்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

News November 16, 2024

திருவாரூர் மாவட்டத்தில் மழைப்பதிவு விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (16.11.2024) காலை 6 மணி துவங்கி மாலை 4 மணி வரை மாவட்டம் முழுவதும் சராசரியாக 13.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை முதல் மாலை 4 மணி வரை 121 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News November 16, 2024

நான்கு தினங்கள் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1,194 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் இன்று மற்றும் நாளை நடத்தப்படுகிறது. இதே போல வருகின்ற நவ.23, 24 ஆகிய தேதிகளில் முகாம் நடைபெறுவதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.