Thiruvallur

News May 15, 2024

திருவள்ளூர் கருமாரியம்மன் கோவில் சிறப்பு

image

திருவள்ளூர், திருவேற்காட்டில் அமைந்துள்ளது கருமாரியம்மன் கோயில். புராணக் கதைகளைக் கொண்ட இக்கோவிலில் அம்மன் நாகபுற்றுள் எழுந்தருளியுள்ளார். இக்கோயில், திருஞானசம்பந்தர் தேவாரம் தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார். அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளார். இங்கு பலரும் நேர்த்திகடன் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

News May 14, 2024

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.14) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News May 14, 2024

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு: ஒருவர் தற்கொலை

image

பூந்தமல்லி அருகே முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனியார் கம்பெனி ஊழியர் சீனிவாசன் (31). இதற்கிடையில் சீனிவாசன், தனது மனைவி பூஜா குமாரின் நகைகளை அடகு வைத்து ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்துள்ளார். இந்த நிலையில் சீனிவாசன் இன்று காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 14, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் உறவினர் மீது வழக்கு பதிவு

image

திருவேற்காடு, கீழ் அயனம்பாக்கம் பகுதியில் கடந்த 10-ஆம் தேதி தனியார் இன்டர்நெட் கேபிளை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் அக்காவின் மகன் சந்திரகுமார் (30) நிறுவனத்தின் மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்து அவரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். திருவேற்காடு போலீசார் நேற்று இரவு வழக்கு பதிந்து சந்திரகுமாரை தேடி வருகின்றனர்.

News May 14, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

பிளஸ் 1 தேர்வில் தனியார் பள்ளி மாணவர்கள் அசத்தல்

image

பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி உமா மகேஸ்வரி 574, ஆபிநயா 568 மற்றும் மோனிகா 556 மதிப்பெண்களை பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மேலும் 21 மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்

News May 14, 2024

திருவள்ளூர்: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 36ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருவள்ளூர் மாவட்டம் 36ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 75.51% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 64.16 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 85.05 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

+1 RESULT: திருவள்ளூரில் 85.54% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்கள் 79.49% பேரும், மாணவியர் 90.99% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 85.54% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாநில அளவில் 37வது இடம். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 14, 2024

திருவள்ளூர்: கொலை வழக்கில் தொடர்புடையவர் சரண்

image

ஆவடி அருகே அண்ணனூர் பகுதியைச் சேர்ந்த மாதவன் (65), கடந்த பிப்ரவரி மாதம் வீட்டில் மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு, அத்திமணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் (32) என்பவரை 3 மாதங்களாக போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சரவணன் அம்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்த நிலையில், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

News May 13, 2024

இரவு ரோந்து போலீஸ் அதிகாரிகள் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டம் இரவு வந்து மேற்கொள்ளும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. விபத்து அவசர காலங்களில் பொதுமக்கள் இந்த எண்களில் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல் தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார்.