Thiruvallur

News March 21, 2025

ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்

image

திருத்தணியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியிடம், ஜோதிநகரை சேர்ந்த வெங்கடேசன் (26) , காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார், இதை நம்பிய அம்மாணவியை மூன்று நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து,நேற்று வெங்கடேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

News March 21, 2025

திருவள்ளூரில் கிராம சபை கூட்டம் தேதி மாற்றம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினம் 23.03.2025 அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களால் கிராம சபை கூட்டம் வரும் 29.03.2025 அன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்து உள்ளார். இதில் மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதான் தெரிவித்துள்ளார்.

News March 20, 2025

திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள (20-03-2025) வியாழக்கிழமை அன்று இரவு ரோந்து போலீசார் விவரங்களை காவல் நிலையம் வாரியாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் குறித்து தகவல்கள் தெரிவிக்க மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 20, 2025

துணை மின் நிலையங்கள் அமைத்து வருகிறோம்: அமைச்சர்

image

“திருவள்ளூர் மாவட்டத்தில் 31 துணை மின் நிலையங்கள் அமைக்க இந்த ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையை ஈடுசெய்ய, ஆய்வு செய்து தேவையான இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைத்து வருகிறோம்” என கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் கேள்விக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

News March 20, 2025

தீராத வியாதிகளை தீர்க்கும் வைத்திய வீரராகவர்

image

திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற வீரராகவர் கோவில் உள்ளது. மூலவரை, வைத்திய வீரராகவர், பிணி தீர்க்கும் வீரராகவர் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். இங்கு 3 அம்மாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து வழிபட்டால், தீராத வியாதிகள், வயிற்றுவலி, காய்ச்சல் ஆகியவை குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிகையாக உள்ளது. தவிர, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.

News March 20, 2025

அமேசான், பிளிப்கார்ட் கிடங்குகளில் திடீர் சோதனை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்குகளில் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் BIS முத்திரை இல்லாத உலோக குடிநீர் பாட்டில்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் என ரூ.36 லட்சம் மதிப்பிலான தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தரமற்ற பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

News March 20, 2025

அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் சோதனை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு லட்சக்கணக்கில் மதிப்புள்ள தரமில்லாத பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர். பொருள்களின் சோதிக்கும் மத்திய தர நிர்ணய அதிகாரிகள் இன்று திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில், கொடுவள்ளி பகுதிகளில் உள்ள அமேசான் சேமிப்புக் கிடங்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர்.

News March 20, 2025

திருவள்ளூரில் வேலை வாய்ப்பு

image

திருவள்ளூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 10,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் 8,10,12th மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு கல்வி தகுதி ஏற்ப பணியிடங்கள் தேர்வு செய்யப்படவுள்ளது. இம்முகாம் பொன்னேரி அரசு கலை கல்லூரியில் மார்ச் 22 நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளுங்கள், ஷேர் பண்ணுங்கள்.

News March 20, 2025

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு உயிருடன் மீட்பு

image

மாம்பாக்கசத்திரம் முக்கோட்டி அம்மன் கோவில் அருகே, 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கியிருப்பதாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி பாம்பை உயிருடன் பிடித்து, கன்னிகாபுரம் காட்டுப்பகுதியில் விட்டனர். இதுபோன்று அடிக்கடி நடப்பதால் வனப்பகுதிக்கருகே தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

News March 20, 2025

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி படுகாயம்

image

திருத்தணி-திருவள்ளூர் நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லட்சுமாபுரம் அருகே மின்கம்பம் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்க்கண்ட் தொழிலாளர் பிரதீப் மால், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!