Thiruvallur

News August 14, 2025

திருவள்ளூர் டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 122 அரசு டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை மண்டல பொது மேலாளரிடம் ஒப்படைக்க, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்துள்ளனர். சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிவாததால் பாதுகாப்பு கருதி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து 122 கடைகளுக்கும் பாதுகாப்பு கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

News August 14, 2025

திருவள்ளூர்: ஆம்னி பஸ்ல அதிக கட்டணமா? கவலை வேண்டாம்

image

தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. சென்னை டூ மதுரைக்கு ரூ.4,000 வரையும், சென்னை- கோவை, சென்னை- திருச்சிக்கு ரூ.1,500 முதல் ரூ.3,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் பாதிக்கப்படும் நிலையில், விடுமுறை நாட்களில் இது தொடர்கதையாக உள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் 1800-424-6151 எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News August 14, 2025

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

ஆடி கிருத்திகை முன்னிட்டு அரக்கோணம் மற்றும் திருத்தணி இடையே தெற்கு ரயில்வே இன்று முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்க உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கும், திருத்தணியில் இருந்து அரக்கோணத்திற்கும் இயக்கப்படும். இது பக்தர்களுக்கு வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 14, 2025

திருவள்ளூர்: சொந்த ஊரில் வங்கி வேலை!

image

திருவள்ளூர் மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 20-க்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News August 14, 2025

திருவள்ளூர் வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

திருவள்ளூர் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். <>இந்த இணையதளத்தில்<<>>, உங்கள் EPIC எண்ணை பதிவிட்டு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். ஏதாவது புகார் இருந்தால் அதே இணையதளத்தில் உள்ள அதிகாரிகளை (ERO/BLO) தொடர்பு கொள்ளுங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!

News August 14, 2025

திருவள்ளூர் வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

திருவள்ளூர் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். <>இந்த இணையதளத்தில்<<>>, உங்கள் EPIC எண்ணை பதிவிட்டு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். ஏதாவது புகார் இருந்தால் அதே இணையதளத்தில் உள்ள அதிகாரிகளை (ERO/BLO) தொடர்பு கொள்ளுங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!

News August 14, 2025

தொழிலாளரின் மூக்கை கடித்து குதறிய நாய்!

image

திருவள்ளூர், பூவிருந்தமல்லி, காவல்சேரியில் கட்டுமான பணி நடக்கும் இடத்தில் கணேஷ் வேலை பார்த்து வருகிறார். அந்த இடத்தின் உரிமையாளர் ராட்வீலர் வகை நாயை வளர்த்து வந்திருக்கிறார். இந்த நாயை கணேஷ் பராமரித்து வரும் நிலையில் நாயானது கணேஷை நேற்று (ஆகஸ்ட் 13) கடித்துள்ளது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் கணேஷின் மூக்கு பகுதி துண்டாகியுள்ளது.

News August 14, 2025

மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து திருவள்ளூரில் மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News August 13, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (13/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News August 13, 2025

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 56 புகார் மனு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று 13.08.2025 நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்றும், ஏற்கனவே பெறப்பட்டு முடிக்கப்பட்ட புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தும், 56 புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாார்‌.

error: Content is protected !!