Thiruvallur

News August 15, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (15/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News August 15, 2025

திருவள்ளூர்: திருமண தடை நீங்க நாளை இத பண்ணுங்க

image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் நாளை ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. முருகன் வள்ளியை மணந்து சாந்தமாக அமர்ந்த மலை என்பதால், முருகனுக்கு உகந்த தினமான ஆடி கிருத்திகை தினத்தில் விரதம் இருந்து, முருகன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. திருமண வரன் பார்க்கும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 15, 2025

திருவள்ளூர்: உள்ளூரிலேயே 20,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன் தனியார் நிறுவனத்தில் TRAINEEக்கான 60 காலிப்பணியிடங்கள் உள்ளது. 12ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 15,000 முதல் 20,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசின் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க பிரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க

News August 15, 2025

திருவள்ளூர்: இலவச AI பயிற்சி, ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்!

image

திருவள்ளூர் மக்களே, AI துறையில் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கு, தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் இலவசப் பயிற்சி அளிக்கிறது. இதற்கு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, அல்லது டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட் போன்ற பணிகளுக்கு, ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் வரை சம்பளத்துடன் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஷேர் பண்ணுங்க

News August 15, 2025

திருவள்ளூர் எம்பி சுதந்திர தின வாழ்த்து

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், அவர் தனது வாழ்த்துச் செய்தியில், சுதந்திரத்தின் உண்மையான தத்துவங்களான சமத்துவம், சகோதரத்துவம், நேர்மை ஆகியவற்றை கடைப்பிடித்து ஒற்றுமையுடன் வாழ்வோம் என வலியுறுத்தியுள்ளார்.

News August 15, 2025

தேசியக்கொடி ஏற்றிய ஆட்சியர் பிரதாப்!

image

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தின விழாவில், ஆட்சியர் பிரதாப் தேசியக்கொடி ஏற்றினார். எஸ்.பி. விவேகானந்த சுக்லாவுடன் இணைந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மூவர்ண பலூன்கள், சமாதானப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. காவல்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியோருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

News August 15, 2025

திருவள்ளூர்: இலவச AI பயிற்சி, ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்!

image

திருவள்ளூர் மக்களே, AI துறையில் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கு, தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் இலவசப் பயிற்சி அளிக்கிறது. இதற்கு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, அல்லது டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட் போன்ற பணிகளுக்கு, ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் வரை சம்பளத்துடன் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஷேர் பண்ணுங்க

News August 15, 2025

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் வாழ்த்து

image

நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட காவல்துறை, தனது சார்பாக, அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

News August 15, 2025

பூட்டிய குடோனில் வாலிபர் வெட்டி படுகொலை

image

மாதவரம், அம்பேத்கர் நகர், அருகே தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தின் இரும்பு குடோன் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டியே உள்ளது. இந்த கிடங்கில் இருந்து நேற்று காலை திடீரென அலறல் சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது மாதவரம், பர்மா காலனியை சேர்ந்த சந்துரு என்பவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

News August 15, 2025

மின்சார ரெயில்கள் அட்டவணை மாற்றம்

image

திருவள்ளூர் சென்னை புறநகர் பகுதிகளில் தினமும், 450க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக் கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வழக்கமாக 40 சதவீத ரெயில்கள் குறைத்து இயக்கப்படும்.ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை செங்கல்பட்டு, சென்ட்ரல் அரக்கோணம், சூலுார்பேட்டை, வேளச்சேரி ஞாயிறு அட்டவணை படி இயங்கும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!