India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நவம்பர் 8 பணமதிப்பிழப்பு கருப்பு நாள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் வினோதமான நடவடிக்கை, பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்தது மட்டுமின்றி, முற்றிலும் தோல்வியையும் தழுவியது என தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கண்டிகை மற்றும் ஒதிக்காடு ஆகிய கிராமங்களில் இன்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த. பிரபுசங்கர் வேளாண் துறை சார்பில் வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மின்னணு பயிர் சாகுபடி மதிப்பீடு குறித்த ஆய்வு மேற்கொள்வதை பார்வையிட்டு பதிவேற்றம் செய்யும் விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர், மாணவர்கள் உடனிருந்தனர்.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக பொன்னேரியில் 25மி.மீ, செங்குன்றத்தில் 17மி.மீ, சோழவரத்தில் 16மி.மீ., ஜமீன் கெரட்டுர் 13 மி.மீ., கும்மிடிப்பூண்டி 12மி.மீ, திருவாலங்காடு மற்றும் பூந்தமல்லி 11 மி.மீ.மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூரில் நாளை நடைபெறவிருந்த வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களால் வரும் நவ.16ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நவ16 ஆம் தேதி காலை8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திருநின்றவூர் ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன என ஆட்சியர் தெரிவித்துள்ளார்,
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையம் அடுத்த கோங்கல்லில் பரவலாக மழை பெய்தது. தற்போது பெய்து வரும் மழையால் செடி, புதர்களில் கொசு மருந்து அடிக்காமல் டெங்கு கொசு உற்பத்தியாகி மக்கள் டெங்குகாய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் காவல்துறை தனது சமூக வலைத்தள பக்கத்தில் சமூக வலைதளங்களில் Trading மூலமாக பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வரும் குறுஞ்செய்திகள் மற்றும் Link -ஐ நம்பி லட்ச கணக்கில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். முதலில் முதலீட்டிற்க்கு சிறு லாபத்தை கொடுத்து பின்னர் அதிக முதலீடு செய்ய சொல்லி எமாற்றுவர். பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறோம் என பதிவு
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 109 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அலுவலகத்திற்கு இருதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் ஆகியவற்றிற்கு மருத்துவ உதவி கேட்டு பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதிக்கு பரிந்துரை செய்து 10 நபர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பெற்றுத்தந்தார்.
Sorry, no posts matched your criteria.