India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று (அக்.23) கனமழை குறைந்ததால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் (அக்.31) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விவசாயப் பெருமக்களும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காண தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்த நிலையில் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை(அக்.23) வழக்கம் போல் பள்ளி, கல்லூரி இயங்கும் என கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். (ஷேர் பண்ணுங்க)

திருவள்ளூர் மாவட்டத்தில் (22.10.2025) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்கள், காவல் நிலையம் வாரியாக பொதுமக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தவொரு அவசர நிலையும், குற்றச் சம்பவங்களையும் நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இது மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் செய்யப்பட்டது

திருவள்ளூர் கலெக்டர் கூட்ட அரங்கில் அக்.31-ம் தேதி மாதாந்திர விவசாயிகள் நலம் காக்கும் கூட்டம் காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது. இதில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் மூலமாக தங்களது கோரிக்கைகளை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இம்மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவார்பாடி ரயில்வே சரங்கப்பாதை அருகே மழைநீர் வெளியேற்றும் பணிகள் இன்று (அக். 22) நடைபெற்றது. இப்பணிகள் குறித்து கலெக்டர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <

திருவள்ளூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து நேற்று இருந்த 1,800 கன அடியில் இருந்து தற்போது 2,170 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் 24 அடி நீர்மட்டத்தில் தற்போது 20.84 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. 3.64 TMC கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 2.8 TMC நீர் இருப்பு உள்ளது. முன்னெச்சரிக்கையாக 100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
Sorry, no posts matched your criteria.