India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆவடி, பாரதிதாசன் நகர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஹெலன் (40). இவரிடம் செல்வி என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வருவதாக கூறி கடந்தாண்டு முதல் ரூ.3 லட்சம் வரை வாங்கி விட்டு பணத்தை திருப்பி தராமல் தலைமறைவானார். இதுகுறித்து ஹெலன் அளித்த புகாரின் பேரில், ஆவடி போலீசார் பண மோசடி செய்த ஜெகதீஸ்வரராவ் (42) மற்றும் அவரது மனைவி செல்வி (35) இருவரையும் நேற்று முன்தினம் (ஜன.30) கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கால்பந்து கோல் போஸ்ட் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி விமானப்படை பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்த ஆத்விக் என்ற சிறுவன் நேற்றிரவு வீட்டருகே உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக கோல் போஸ்ட் சிறுவன் மீது விழுந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சுயநினைவின்றி உயிரிழந்தான். குடும்பத்தார் கதறி அழுது வருகின்றனர்.
பட்டாபிராம் மிட்டினமல்லி ரயில் நிலையத்தில் கடந்த 2023இல் ரயிலில் பயணித்த கல்லூரி மாணவி வர்ஷாவிடம் லேப்டாப், செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பினார். இந்த வழக்கின் இறுதி விசாரணையில், சிவக்குமார் (45) என்பவர் திருடியது நிரூபிக்கப்பட்டது. திருவள்ளூர் நீதிமன்றம் அவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின், ஆவடி ரயில்வே போலீசார் சிவக்குமாரை புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரதாப் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினனை சந்தித்து வாழ்த்து பெற்றார். திருவள்ளூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் பிரபு சங்கர் அவர்கள் தற்போது எம்டிசி மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்றுவேன் என்று சூளுரைத்துள்ளார்.
தமிழகத்தின் 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பிரபு சங்கர் மாற்றப்பட்டு சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை, துணைச் செயலாளர் பணியாற்றி வந்த பிரதாப் முருகன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சியருக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபுசங்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக பிரதாப் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். பிப்.3ஆம் தேதிக்கு மேல் விண்ணப்பிக்கலாம் <
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரியசோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி (30). இவர், நேற்று (ஜன.30) மதியம் குழந்தைகளுக்கு பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த கணவர் சுரேன் உடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஸ்கூட்டர் மீது லாரி ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த தனலட்சுமி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை, மகள் இருவரும் இறந்த அதிர்ச்சியில் செய்வதறியாமல் எபினேசர் திகைத்துபோய், வீட்டில் ஏ.சி.யை ஆன் செய்துவிட்டு கதவை பூட்டிவிட்டு எபினேசர் தனது சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு தப்பிச் சென்றுள்ளார். பிறகு தனது மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக கடந்த 4 மாதங்களாக வீட்டு வாடகை செலுத்தி வந்துள்ளார். ஏ.சி. ஆன் பண்ணியே இருந்ததால், இறந்த இருவரது உடல்களும் அழுகுவதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.