Thiruvallur

News March 27, 2025

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை பதிவு

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இணைய மோசடிகாரர்கள் சமூக ஊடக கணக்குகளில் தள்ளுபடியில் IPL டிக்கெட்டுகள் வைத்திருப்பதாகக் கூறி, QR லிங்க் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்கிறார். எனவே தெரியாத இணைப்புகளை கிளிக் செய்யாதீர்கள். QR குறியீடுகள் மூலம் அவர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என எச்சரிக்கை பதிவு செய்துள்ளது.

News March 27, 2025

பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி புதிய வட்டாட்சியர்கள் நியமனம்

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய வட்டாட்சியர்கள் நியமனம் பொன்னேரி வட்டாட்சியராக இருந்த சிவகுமார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு புதிய வட்டாட்சியராக டி ஆர் சோமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார் மேலும் கும்முடிபூண்டி வட்டாட்சியராக கே சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

News March 26, 2025

திருவள்ளூர்: கேந்திரிய வித்யாலயா மாணவர் சேர்க்கை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய அரசு கல்வித்துறையின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. Pre-KG, UKG ஆகிய வகுப்புகள் உட்பட முதலாம்  வகுப்பிற்கும் மாணவர்கள் சேர்க்கை மார்ச் 7-ம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி முடிந்தது. மேலும் மீதம் உள்ள இடங்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது .

News March 26, 2025

இந்திய ரயில்வே வேலை: சூப்பர் சம்பளம்

image

இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ, டிப்ளமோ, BE, B.tech, முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும்.

News March 26, 2025

குறைதீர் கூட்டத்தில் 736 மனுக்கள் பெறப்பட்டன

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (மார்.25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், நிலம் சம்பந்தமாக 235, வேலைவாய்ப்பு சம்பந்தமாக 94, சமூக பாதுகாப்பு திட்டம் சம்பந்தமாக 108, அடிப்படை வசதிகள் வேண்டி 153 என மொத்தம் 736 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை தாங்கி, மனுக்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News March 26, 2025

பணியின்போது உயிரிழப்பு: சடலத்துடன் போராட்டம்

image

கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி (57), தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 22ஆம் தேதி பணிக்கு சென்றவர் நேற்று முன்தினம் மாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றபோது இறந்துவிட்டார். இதையடுத்து, தொழிற்சாலையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

News March 26, 2025

தாய்ப்பால் குடித்த பெண் குழந்தை மூச்சுத்திணறி பலி

image

திருத்தணி, சாய்பாபா நகரைச் சேர்ந்தவர் சுவாதி – பிரித்திவிராஜ் தம்பதியினர். இவர்களுக்கு 2 மாதமான பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு நேற்று (மார்.25) தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி துடித்தது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

News March 26, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 25, 2025

3 ரூபங்களில் காட்சியளிக்கும் முருகன்

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியம் திருத்தலத்தில் மாசி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இத்தலத்தில் மூலவர் முருகன், காலை பாலனாக, நண்பகல் வாலிபனாக, மாலை வயோதிகனாக காட்சி தருவது சிறப்பாகும். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அன்னதானம் பெற்றனர்.

News March 25, 2025

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு ஆயுள் தண்டனை

image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த முருகன் (41) என்பவர், தனது 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2019ல் அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முருகன் மீது திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு நீதிபதி, முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!