Thiruvallur

News February 19, 2025

அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதை செய்யுங்க

image

திருவள்ளூரில், இன்ஃப்ளூயன்ஸா தொற்று பரவி வருகிறது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறிகள் மற்றும் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சையளிக்க வேண்டும். தீவிர பாதிப்புள்ள 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம்.

News February 19, 2025

விபத்தில் மனைவி கண்முன்னே கணவர் பலி

image

அம்பத்துார் பகுதியில் வசித்தவர் செல்வராஜ். தனியார் நிறுவன மேலாளரான இவர் தனது மனைவி சரசு உடன் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கவரைப்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரியின் பின்னால் பைக் மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மனைவி சரசு சிகிச்சை பெற்று வருகிறார்.

News February 19, 2025

பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு

image

மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வாரும் 22ஆம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

News February 19, 2025

TVK இளைஞரணி அலுவலக கட்டிடம் இடிப்பு

image

நடிகர் விஜய்யின் TVK கட்சி சார்பில் திருவள்ளூரில் கட்டப்பட்டு இருந்த இளைஞரணி அலுவலக கட்டிடத்தை அதிகாரிகள் நேற்று (பிப்.18) இடித்து அகற்றினர். சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து TVK கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகச் சொல்லி, அதிகாரிகள் இடித்தனர். இதனால் அங்குச் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. TVK அலுவலகம் ஆக்கிரமிப்பு என முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே இடித்து அகற்றப்பட்டது.

News February 18, 2025

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வாழும் 1.3 லட்சம் நெசவாளர்கள், குறைந்தபட்ச ஊதியச் சட்டத்திற்காக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும், விசைத்தறி நெசவாளர்களுக்கான பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (பிப்.17) வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால், 30,000க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் இயங்காமல் செயலிழந்தன. சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

News February 18, 2025

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

வரும் 21ஆம் தேதி திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று 300க்கும் மேற்பட்டோரை தோ்வு செய்ய உள்ளனா். 10, +2, பட்டப் படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்

News February 18, 2025

சூடுபிடிக்கும் தமிழ்நாடு ‘அறிவு நகரம்’ திட்டம்

image

ஊத்துக்கோட்டை, பெரியபாளையத்தை ஒட்டி ரூ.200 கோடி மதிப்பீட்டில், 1,703 ஏக்கர் பரப்பளவில் அறிவு நகரம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல்மாளிகைப்பட்டு, செங்காத்தான்குளம் மற்றும் வெங்கல் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தல் பணிகள் தொடங்கப்பட்டன. பசுமை கட்டிடங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து, ஸ்மார்ட் இணைப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பை இந்த திட்டம் கொண்டிருக்கும்.

News February 17, 2025

குடும்ப ஒற்றுமை மேம்பட அருளும் திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள்

image

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோயில், சென்னையிலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு பக்தவத்சல பெருமாள் மற்றும் எண்ணைப் பெற்ற தாயார் ஆகியோர் பூஜிக்கப்படுகிறார்கள். குடும்ப ஒற்றுமைக்காக பக்தர்கள் இங்கு பெருமாளை வழிபாட்டு செல்கிறார்கள், இது தமிழ்நாட்டின் முக்கியமான வைணவ தலங்களில் ஒன்றாகும்.Share it

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 16, 2025

திருத்தணி முருகன் கோவிலில் பவன் கல்யாண் வழிபாடு 

image

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், திருத்தணி முருகன் கோவிலில் தரிசனத்திற்காக நேற்று (பிப்.15) வருகை வந்தார். மதுரையில் இருந்து விமானம் மூலம் அரக்கோணம் வந்த அவர், அங்கிருந்து காரில் கோவிலுக்கு சென்றார். கோவிலில், விசேஷ பூஜைகள் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனத்திற்காக பக்தர்கள் திரண்டனர். பாதுகாப்பு காரணமாக உச்சிகால அபிஷேகம் ஒரு மணி நேரம் தாமதமானது.

error: Content is protected !!