Thiruvallur

News October 24, 2025

திருவள்ளூர்: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

image

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில்<> இங்கே கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News October 24, 2025

திருவள்ளூர்: சாலையில் தேங்கிய நீரில் விழுந்த தங்கம்

image

பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே பெண் ஒருவர் நடந்து சென்றபோது அவர் காதில் அணிந்திருந்த ஒரு பக்க தங்க கம்மல் கழன்று சாலை பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விழுந்தது. நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு சாலையில் தேங்கிய மழைநீரில் விழுந்த தங்க கம்மலை வட மாநில தொழிலாளர்கள் கண்டுபிடித்து கொடுத்தனர். சாலை குண்டும், குழியுமாக இல்லாதிருந்தால் கம்மலை கண்டுபிடிக்க இந்த போராட்டம் தேவையில்லை என சிலர் வசைபாடி சென்றனர்.

News October 24, 2025

திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் ரத்து

image

திருத்தணி முருகன் கோயிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழா ஒட்டி நேற்று முதல் நாளை மறுநாள் வரை மூலவர் முருகப்பெருமானுக்கு காலை, 9:00 மணி முதல் நண்பகல், 11:00 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. இதனால் 2 மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 23, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் அதிகாரி விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 23, 2025

திருவள்ளூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திருவள்ளூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8098822551-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 23, 2025

திருவள்ளூர் பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

image

திருவள்ளூர் பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 23, 2025

திருவள்ளூர்: ரயில்வேயில் 5,810 காலி இடங்கள்- APPLY NOW

image

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து வரும் நவ்.11ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க

News October 23, 2025

திருவள்ளூரில் காய்ச்சல் தடுப்பு இலவச மருத்துவ முகாம்

image

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று (23.10.2025) நடைபெற உள்ளன. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் முகாம் நடைபெறும் இடங்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பொதுமக்களுக்கு இலவச சோதனை, மருந்து வழங்கல் மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

News October 23, 2025

திருவள்ளூரில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க

News October 23, 2025

திருவள்ளூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்க உதவும் உதவி எண்கள் மாவட்ட காவல் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகள் இன்று (22.10.2025) வெளியிட்டுள்ளன. அவசர காலங்களில் மக்கள் இந்த எண்களில் தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம், தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படும். மேலே உள்ள படத்தில் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!