Thiruvallur

News April 9, 2025

திருவள்ளூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய அரசின் வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் 3.25 லட்சம் கிலோ பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.86.82க்கு விற்பனை செய்யப்படும். செங்குன்றத்தில் 2.75 லட்சம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டியில் தலா 25,000 கிலோ கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் ஆவணங்களுடன் பதிவு செய்யலாம்’ என தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

திருவள்ளூர்: திருமணமாக செல்ல வேண்டிய காலபைரவர் கோவில்

image

திருவள்ளூர் மாவட்டம் தும்பரம்பேடு கிராமத்தில் பைரவன் மேடு என்ற குன்றின் மேல் ஸ்ரீ மகாகால பைரவர் கோவில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தல விருட்சமாக செம்மரம் உள்ளது. அஷ்டமி, தேய்பிறை மற்றும் கார்த்திகை மாதங்களில் வழிப்பட்டால் வேலையும், திருமண பாக்கியமும், நல்ல படிப்பும் கிடைக்கும் என்பது ஐதீகம். *திருமணமாகாத, வேலையில்லாத நண்பர்களுக்கும் பகிரவும்*

News April 9, 2025

திருவள்ளூர்: வேலை இல்லாதோருக்கு உதவித் தொகை

image

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. 10th பாஸ்/ஃபெயில், 12th பாஸ், பட்டதாரிகளும்(45 வயதுக்குள்) மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியா் மு. பிரதாப் தெரிவித்துள்ளார். *சூப்பர் வாய்ப்பு. தெரிந்த 10th பாஸ்/ஃபெயில்,12th பாஸ், பட்டதாரிகளுக்கு பகிரவும்

News April 9, 2025

திருவள்ளூரில் தொழில் தொடங்க அழைப்பு

image

திருவள்ளூர் மகலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் தொழில் துவங்க ரூ.1 கோடி வரை வங்கி கடன் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், 25 வயதுக்கு மேல் இருக்கும் மு.படைவீரர்கள் மகன்கள், முன்னாள் படைவீரருடன் இணைந்து பங்குதாரர் ஆக தொழில் தொடங்கலாம்’ என தெரிவித்தார். *ஷேர் பண்ணவும்*

News April 9, 2025

குவாரி குத்தகை உரிமங்கள் பெற ஆட்சியர் அழைப்பு 

image

திருவள்ளூர் மாவட்டத்தில் சாதாரண கற்கள், கிரானைட் மற்றும் இதர சிறுகனிமங்களின் குவாரி குத்தகை உரிமங்கள் இணையவழி முறையில் வழங்குவதற்கான நடைமுறை வரும் ஏப்ரல் 10ஆம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இணையதளமான mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் குவாரி குத்தகை உரிமம் தொடர்பான விண்ணப்பங்களை பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈக்காடு அருகே உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் ‘டான்செம்’ வாயிலாக வாரும் 19ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழக தொழில் வளர்ச்சி கழகத்தின் ‘டான்செம்’ நிறுவனம், வேலைவாய்ப்பு பயிற்சி வழங்குகிறது. ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல், செவிலியர், ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டதாரிகள் பங்கேற்கலாம். உள்நாடு, வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News April 9, 2025

மப்பேடு ஏரியில் மூழ்கி முதியவர் பலி

image

மப்பேடு, கீழச்சேரியைச் சேர்ந்த சின்னபையன் (60), கடந்த 6ஆம் தேதி நரசமங்களம் பெரிய ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. மறுநாள் (ஏப்ரல் 7) உறவினர்கள் ஏரிக்கு சென்று தேடியபோது, சின்னபையன் ஏரியின் மதகு பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். மப்பேடு போலீசார் உடலை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

News April 9, 2025

பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கொடூரம்

image

திருவள்ளூரில், பள்ளித் தோழியிடம் ஆசை வார்த்தை பேசி வீட்டிற்கு வரவழைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்காதலியுடன் கூட்டு சேர்ந்து அப்பாவி பெண்ணிடம் நகைப்பறிக்க திட்டமிட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கணவனை பிரிந்து காதலன் ஜெயந்தன் உடன் சேர்ந்து ஹேமலதா என்பவர் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்ச்சியுள்ளனர். ஹேமலதா தலைமறைவாகியுள்ளார்.

News April 8, 2025

வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர் பலகை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக, தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில், முதன்மையான மொழியான தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும். வரும் மே 1ஆம் தேதிக்குள் இந்த இதனை செய்ய வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. ஆட்சியர் மு. பிரதாப் அறிவித்ததின்படி, தவறினால் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் கூறினார்.

News April 8, 2025

திருத்தணி அருகே லாரி – பேருந்து மோதி விபத்து: 11 பேர் காயம்

image

திருத்தணியில் இருந்து கிறிஸ்துவ கூட்டத்திற்கு, கல்லூரி பேருந்தில் 60 பேர் சென்றுள்ளனர். கூட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பும்போது, சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த 11 பேர் காயமடைந்தனர். 10 பெண்கள் மற்றும் 1 ஆண் உட்பட 11 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!