Thiruvallur

News April 10, 2025

திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம் 

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (10/04/2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது அவசர தேவைக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அழைக்கலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இரவில் வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட அனைவருக்கும் பகிரவும். கண்டிப்பாக தேவைப்படும்.

News April 10, 2025

திருவள்ளூரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகமாகும்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்து 5 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக காணப்படும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார். இது குறித்து அவர், ‘ராயலசீமா, வட கர்நாடக பகுதியில் இருந்து வெப்ப அலை தமிழ்நாட்டின் நோக்கி வர வாய்ப்புள்ளதால் வெப்பம் அதிகமாக காணப்படும்’ என தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 5 நாட்களுக்கு வெளியே செல்பவர்கள் குடை எடுத்து செல்லவும். *நண்பர்களையும் உஷார் படுத்தவும்*

News April 10, 2025

திருவள்ளூர் ராணுவ தொழிற்சாலையில் வேலை 

image

திருவள்ளூவர் மாவட்டம் ஆவடியில் உள்ள மத்திய அரசின் ராணுவ இன்ஜின் பேக்டரியில் பல்வேறு பணிகளுக்கு மொத்தம் 80 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ITI, B.E/B.Tech, MBA, M.E/M.Tech, ICAI, ICMAI படித்த 18-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.21,000-ரூ.30,000 வரை வழங்கப்படும். மேலும், தகவலுக்கு <>இங்கு கிளிக் செய்யவும்<<>>. *செம வாய்ப்பு. தெரிந்தவர்களுக்கு பகிரவும்*

News April 10, 2025

மாநகராட்சியில் வேலை: நாளை கடைசி நாள்

image

சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள நகர்புற சுகாதார நல மையங்களில் 345 பணியிடங்கள் உள்ளன. மருத்துவ அதிகாரி, நர்ஸ், சுகாதார பணியாளர், சமூக சேவகர், பேறுகால பணியாளர், எக்ஸ்ரே வல்லுநர், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை 5 மணிக்குள் ரிப்பன் மாளிகைக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News April 10, 2025

கோழி, ஆட்டு பண்ணை அமைக்க தொழில்முனைவோருக்கு மானியம்

image

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் அறிவித்ததன்படி, தேசிய கால்நடை இயக்க தொழில்முனைவோர் திட்டத்தில் கோழி, ஆட்டு, பன்றி பண்ணைகள் அமைக்க அரசு நிதியுதவி வழங்குகிறது. இறைச்சி, முட்டை உற்பத்தி உயர்ந்து, வேலைவாய்ப்பு அதிகரிக்கும். விண்ணப்பிக்க https://nlm.udyamimitra.in-ல் பதிவு செய்யலாம். இது குறித்து கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 10, 2025

டாஸ்மாக் கடைகள் மூடல்

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 10) டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்து மூட வேண்டும். தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் மற்றும் உரிம நிபந்தனைகளின்படி, டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும். மீறி விற்பனை செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News April 10, 2025

டீ குடித்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து பலி

image

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா (56). இவர், நேற்று (ஏப்ரல் 9) மாலை வீட்டில் குடும்பத்தினருடன் சேர்ந்து டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். உடனே, குடும்பத்தினர் அவரை திருவள்ளுவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 10, 2025

குடிபோதையில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து

image

திருவள்ளூர் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி, நேற்று (ஏப்ரல் 9) குடிபோதையில் காமராஜர் சிலை அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சுனில் என்பவரிடம் ரூ.20 கடனாக கேட்டுள்ளார். சுனிலிடம் பணம் பெற்ற பொன்னுமணி, ‘கஞ்சா எங்கு கிடைக்கும்’ எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுனில், கத்தியால் பொன்னுமணியை கை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார். போலீசார், சுனிலை கைது செய்தனர்.

News April 10, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று 09/04/2025 இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் . மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட அனைவருக்கும் பதிவிடவும்*

error: Content is protected !!