Thiruvallur

News March 2, 2025

46 வழித்தடத்தில் மினி பஸ் இயக்க முடிவு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2,600 குக்கிராமங்களில், மினி பேருந்துகள் சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, 46 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, 7 முதல் 25 கி.மீ., தூரத்திற்கு மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மின் பேருந்துகளை இயக்க விருப்பம் உள்ளவர்கள் திருவள்ளூர் மாவட்ட இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

News March 2, 2025

சாலை விபத்தில் சிக்கிய பைக்: நண்பர்கள் கண்முன்னே பலி

image

பழவேற்காடு ஜமீலாபாத் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காசிம், நிஜாமுதின், அரோன் ஆகியோர் சமையல் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். நேற்று (மார்.1) தேவம்பட்டு பகுதியில் சமையல் வேலையை முடித்துவிட்டு மூவரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கோளூர் கிராமம் அருகே பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடி விபத்துக்குள்ளானது. இதில், அப்துல் காசிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

News March 1, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 1, 2025

திருமண வரன் தரும் அருள்மிகு கருமாரியம்மன்

image

திருவேற்காட்டில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ள அம்மன் சிலை மரத்தால் செய்யப்பட்டது. ஐப்பசி பவுர்ணமி, வைகாசி விசாகம் போன்ற தினங்களில் இங்கு விஷேஷம். இந்த கோவிலில் வேண்டுதலை மனதில் நினைத்து உண்டியலில் பூட்டு வைத்து வணங்கினால் நிறைவேறும் என்பது ஐதிகம். மேலும், திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் மற்றும் நீண்ட நாள் பிரச்சனை நீங்குமாம். ஷேர் பண்ணுங்க.

News March 1, 2025

பார்மசி படிப்பு முடித்தவர்களுக்கு வேலை

image

தமிழக அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் (Pharmacist) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பார்மசி படிப்பில் டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு, Pharm. D முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 1, 2025

பாமக முன்னாள் செயலாளர் கௌரிவேல் உயிரிழப்பு

image

ஆவடி நகர பாமக முன்னாள் செயலாளர் கௌரிவேல் உயிரிழந்தார். அவரது மறைவு அதிர்ச்சி அளிப்பதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். “சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய சிறந்த செயல்வீரர் கௌரிவேல். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து மீளாத் துயரில் வாடும் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

News February 28, 2025

குடும்ம பிரச்னையை நீக்கும் அங்காளம்மன்

image

ராமாபுரம் அடுத்த புட்லூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு அடி வெள்ளி, அம்மாவாசை, பொர்ணமி, மயான கொள்ளை போன்ற தினங்களில் விஷேஷம். இந்த கோவிலில் வேண்டுதலை மனதில் நினைத்து எலுமிச்ச பழத்தை அம்மன் பாதத்தில் வைத்து, அது உருண்டு வந்து முந்தானையில் விழுந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இங்கு வந்தால் குழந்தை பாக்கியம், திருமண தடை, வீட்டில் பிரச்சனை போன்றவை தீருமாம். ஷேர் பண்ணுங்க.

News February 28, 2025

திருமுல்லைவாயலில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயிலை சேர்ந்த ஏழுமலையின் 11 வயது மகன் சுதர்சன். இவர் பரோட்டா சாப்பிட்ட பின் 2 நாளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலே உயிரிழந்தார். பரோட்டா சாப்பிட்டதால் தான் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 28, 2025

SBI வங்கியில் வேலை: கைநிறைய சம்பளம்

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க<<>>

News February 28, 2025

இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்

image

ஹெட்போன், இயா்போன் போன்ற கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித்திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. எனவே திருவள்ளூர் மக்களே அதன் பயன்பாட்டை கூடுமான வரையில் தவிா்க்க வேண்டும். 50 டெசிபல் அளவுக்கு குறைவாக வைத்து பயன்படுத்த வேண்டும். இயா்போனை 2 மணி நேரத்துக்கும் மேல் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். குழந்தைகள் கைப்பேசி, தொலைக்காட்சியை அதிக ஒலியுடன் பாா்க்கக் கூடாது.

error: Content is protected !!