India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் தேசிய நல்வாழ்வு திட்டத்தில் செயல்படும் மாவட்ட நலச் சங்கத்தில் காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.23,000- 60,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் <
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகும். நாளை தமிழ் புத்தாண்டு அன்று முருகனை வணங்கினால் வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் கிட்டுமாம். உங்க நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பின் பேரில், இன்று திருவள்ளூர் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் சந்தை துவங்கவுள்ளது. காய்கறி, பழம், மரச்செக்கு எண்ணெய், பாரம்பரிய அரிசி, தேன், பனை வெல்லம் உள்ளிட்டவை குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இச்சந்தை, ஒவ்வொரு மாதத்தின் 2வது ஞாயிறு காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
பள்ளிப்பட்டு வட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் குமரேசன் வயது (16). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று (ஏப்ரல்.12) மாலை, நகரி திண்டிவனம் ரயில் பாதைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
செங்குன்றம் அருகே சிரங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த 75வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். கடந்த 8 ம் தேதி, மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். மூதாட்டி கூச்சலிடவே வாலிபர் தப்பியோடினார். புகாரின் அடிப்படையில் விச்சூரை சேர்ந்த தமிழன்பன் சந்துரு (23) என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (12/04/2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *குற்றங்கள் அதிகரிக்கும் இந்நாளில் இது கண்டிப்பாக உதவும். பகிரவும்*
திருவள்ளூர் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் <
பங்குனிமாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி ரொம்ப ஸ்பெசல் தான். இன்றைய தினம் சிவனுக்கு பால் அபிஷேகம் (or) பூக்களால் அர்ச்சனை செய்தால் பல தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். செல்ல வேண்டிய சிவன் கோவில்கள் திருத்தணி வீரட்டேசுவரர் கோவில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், பூண்டி ஊன்றீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில். *நண்பர்களுக்கும் பகிரவும்
Sorry, no posts matched your criteria.