Thiruvallur

News March 4, 2025

சித்தா, ஆயுர்வேதா படித்தவர்களுக்கு அரசு வேலை

image

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபட்சமாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் <>ஆன்லைன் <<>>வழியாக இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

News March 4, 2025

345 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதவில்லை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 109 மையங்களில், நேற்று (மார்.3 பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாள் மொழிப்பாட தேர்வில் 27,836 பேரில், 27,554 பேர் தேர்வு எழுதினர். 282 மாணவர்கள் தேர்வில் பங்கு பெறவில்லை. அதேப்போல, 600 தனித்தேர்வர்களில் 537 பேர் பங்கேற்றனர். அவர்களில் 63 பேர் தேர்வில் பங்குபெறவில்லை. ஒட்டு மொத்தமாக நேற்று ஒரே நாளில் 345 பேர் தேர்வு எழுதவில்லை என கலெக்டர் பிரதாப் கூறினார்.

News March 4, 2025

சாலை விபத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் காயம்

image

திருத்தணியில், திருமணம் முடிந்த சில மணி நேரத்தில், புதுமண தம்பதி விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். பாலாஜி, சந்தியா தம்பதி மற்றும் சசி ஆகியோர் ஆட்டோவில் வீடு திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது ஆட்டோ. கோயில் இரும்பு கேட் மற்றும் நீதிமன்ற சுவரில் மோதியதால், தம்பதி உள்பட 4 பேரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 4, 2025

+2 மாணவி தீக்குளித்து தற்கொலை

image

திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்த மாணவி, நேற்று முன்தினம் (மார்.2) இரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். நேற்று (மார்.3) அதிகாலை, வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற அவர், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்ட பெற்றோர், மாணவியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

News March 3, 2025

திருவள்ளூர் மீனவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

திருவள்ளூர் மாவட்டம் கடற்கரை ஒட்டி உள்ள கிராம மக்கள் புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள் மீன் பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகை பெற மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மீன்வளம் மற்றும் மீன்வள மேம்பாட்டு கழகம் கால்நடை பராமரிப்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

News March 3, 2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் PHH / AAY குடும்ப அட்டை பயனாளிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்ய மத்திய அரசால் அறிவுறுத்தப்படுவதால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நியாய விலை கடைகளில் 21% குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டமால் உள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் விரல் ரேகையினை நியாயவிலை கடையில் மார்ச் 10ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 3, 2025

மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளி பயனாளிகள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.

News March 3, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று (03.02.2025) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2024-25 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கு 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.5,09,000 மதிப்பீட்டில் இணைப்புச் சக்கர பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப் வழங்கினார். உடன் பல்வேறு துறை அலுவலர்கள் உள்ளனர்.

News March 3, 2025

போஸ்ட் ஆபிசில் வேலை; இன்றே கடைசி நாள்

image

சென்னை. செங்கல்பட்டில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 91 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000-ரூ.24,470 வரை சம்பளம். இன்றைக்குள் (மார்.3) இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News March 3, 2025

கொசவன்பேட்டையில் ஆண் சடலம் மீட்பு

image

ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் அருகே கொசவன்பேட்டை பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன. இதையடுத்து பெரியபாளையம் போலீசார்  உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரப்பரப்பாக காணப்பட்டது.

error: Content is protected !!