India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு திருவள்ளூர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்குக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கூட்டாக அறிவித்தனர். இதனையடுத்து திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிட உள்ளனர். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.

புழல் பகுதியை சேர்ந்தவர் தயாநிதி, அவரது மகள் ஜெயபாரதி +2 மாணவி. ஜெயபாரதியுடன் தயாநிதி பைக்கில் ஆத்தூர் மேம்பாலம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதி ஜெயபாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தயாநிதியின் 2 கால்கள் மீதும் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. லாரி ஓட்டுநர் பாரத் சர்மாவை போலீசார் கைதுசெய்தனர்.

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 44 முக்கிய சாலைகளில் குளோவிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அதிநவீன 106 IP கேமராக்கள் மற்றும் 86 ANPR கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் இன்று அதனை தொடங்கி வைத்தார்.

பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் அப்துல் ரகுமான், இர்ஷாத், முகமது உசேன், ஜமீல் பாஷா ஆகிய 4 பேரை போலீசார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிபதி இளவழகன் அனுமதி அளித்தார். 10 நாட்கள் போலீசார் விசாரணை முடிந்து மார்ச் 28ஆம் தேதி 4 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மண்டல அலுவலகத்தில் நேற்று (மார்ச் 18) போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் 13 மணி நேரம் தீவிர விசாரணை நடைபெற்றது. பின்னர் ஜாபர் சாதிக்கை அதிகாரிகள் மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். ஜாபர் சாதிக்கின் மேலாளர் இம்ரான், கணக்காளர் ஷெரிப்பிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

ஈரோடைச் சேர்ந்த அய்யாவு, (வயது 79) போக்சோ வழக்கில் கைதாகி கடந்த மாதம் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்த அய்யாவுக்கு திடீரென சுவாசக்கோளாறு ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொன்னேரி – மீஞ்சூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிப்பூண்டி மார்கத்தில் செல்லும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் காலை 9.25 முதல் 11.40 வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் 6 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் புறநகர் ரயில், மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள கரகம்பாக்கம் கிராமத்தில் இன்று அதிகாலை ஆட்டோவில் 2 ஆடுகளை கடத்தி சென்ற 4 பேரை அப்பகுதியினர் மடக்கி பிடித்து ஊத்துக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர்கள் அம்பத்தூரை சேர்ந்த தீபக்குமார், கௌதம், சசிகுமார் மற்றும் ஹரிஹரன் என்பது தெரியவந்தது.

2024 மக்களவை தேர்தலில் திருவள்ளூர் தொகுதி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களை தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் கே.ஜெயக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் திருவள்ளூரில் மீண்டும் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது.
Sorry, no posts matched your criteria.