Thiruvallur

News September 17, 2024

திருவள்ளூர் அருகே விபத்தில் மரணம்; 30 பேர் காயம்

image

நேற்று சென்னை செங்குன்றம் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி தடம் எண் 104 என்ற மாநகரப் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. டிரைவர் ஆரோக்கியம் ராஜேஷ் என்பவர் பேருந்து ஓட்டிச் சென்றார்.திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ டிரைவர் மாதவரத்தை சேர்ந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். பயணிகள் முப்பது பேருக்கு காயம் இதுகுறித்து போலீசார் விசாரணை.

News September 17, 2024

திருவள்ளூர் முதல்வர் கோப்பையில் குழப்பம்; போராட்டம்

image

திருவள்ளூர் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி 16,17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாவட்ட விளையாட்டு துறை அறிவித்திருந்தது. இதற்காக நேற்று போட்டியில் பங்கேற்க 250-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.நேற்று நடைபெறவிருந்த போட்டி நேற்றுமுன்தினம் முடிவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விளையாட்டு வீரர்கள் போராட்டம் நடத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

News September 16, 2024

திருவள்ளூர் அருகே 500 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

image

பூந்தமல்லி அருகே பழஞ்சூர் கிராமத்தில் ரூ.500 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.500 கோடி மதிப்புள்ள 25 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். அரசு நிலங்கள் இது போல் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது குறித்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

News September 16, 2024

திருவள்ளூர் அருகே கொலை; மூவர் கைது

image

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிஷ். லாரி டிரைவர். இவர் கடந்த 13 ஆம் தேதி செங்குன்றம் பகுதிக்கு நெல் மூட்டைகளை ஏற்றி வந்தார்.சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதுவது போல் வந்ததாக கருதி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.விஏஓ கொடுத்த புகாரின் பேரில் கும்மானூர் சேர்ந்த தியாகராஜ், புது சத்திரம் கோகுல பாண்டியன்,மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் குமார் ஆகிய மூவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News September 16, 2024

திருவள்ளூர் அருகே 6 கி.மீட்டருக்கு கொடி,பேனர்கள்

image

அ.தி.மு.க.,வினர் திருமழிசை – ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அரண்வாயல்குப்பம் பகுதியில் இருந்து மணவாள நகர் வரை 6 கி.மீ., துாரத்திற்கு சாலையின் இருபுறமும் விளம்பர பேனர்கள், மீடியனில் கொடிக்கம்பங்கள் வைத்திருந்தனர். பேனர் வைப்பது மற்றும் கொடி கம்பங்கள் கட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 16, 2024

ஜப்பான் பெண்ணை திருமணம் செய்த திருவள்ளூர் மாப்பிள்ளை

image

திருவள்ளூர் பகுதியை சார்ந்த ராஜேஷ் பொறியியல் பட்டம் பெற்று ஜப்பான் நாட்டில் பணி செய்து வந்தபோது அங்கு உடன் பணி செய்து வந்த மியூகி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் இன்று திருவள்ளூரில் இருவருக்கும் முறைப்படி திருமணம் நடைப்பெற்றது. இதில் மணப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஜப்பானிலிருந்து வருகை தந்து திருமணத்தில் கலந்து கொண்டனர்.

News September 16, 2024

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை

image

திருவள்ளூர் மத்திய மாவட்ட பொருளாளர் ஜாவித் அகமது திடீரென மரணம் அடைந்தார். இதன் காரணமாக இன்று அண்ணா 116வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரவாயலில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறும். அதே நேரத்தில் 21 ஆம் தேதி நடைபெற இருந்த கூட்டங்கள் அனைத்தும் அதற்கு முன்பு, பின்பு நடத்த திருவள்ளூர் ஒருங்கிணைந்து மாவட்ட செயலாளர் ஏற்பாடு செய்யுமாறு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேட்டுக்கொண்டார்.

News September 15, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 15, 2024

திருவள்ளூர் மத்திய மாவட்ட பொருளாளர் திடீர் மரணம்

image

திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக பொருளாளராக பணியாற்றி வந்தவர் ஜாவித் அகமது (60). அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதய நோய் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக இன்று மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் அதிமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளராக பணியாற்றினார்.

News September 15, 2024

ஓணம் வாழ்த்து கூறிய திருவள்ளூர் எம்.பி.

image

ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் வளர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மலையாளம் பேசும் மக்களால் கொண்டாடப்படும் ஓணத்திருநாளில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட இன்னல்களிலிருந்து கேரள மக்களுக்கு உள்ள போராட்ட குணத்துடன் மீண்டு உற்சாகமுடன் கொண்டாடிட இந்த ஓணத்திருநாள் அமையட்டும் என்றார்.