India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9444371912 என்ற திருவள்ளூர் மாவட்ட வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மின்சார வாரியத்தின் <
தமிழகத்தில், நேற்று (ஏப்ரல் 21) 9 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக கரூரில் 103.1, திருத்தணியில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. தினமும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் வெயில் பதிவாகி வருவதால், திருவள்ளூர் மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். குடிநீர், குளிர்பானங்களை அதிகம் குடியுங்கள். முடிந்தளவுக்கு மதிய நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்திடுங்கள். ஷேர் செய்யுங்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று திங்கட்கிழமை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
1.பழவேற்காடு ஏரி
2.பூண்டி நீர்த்தேக்கம்
3.வீர ராகவ சுவாமி கோயில்
4.திருத்தணி முருகன் கோயில்
5.செம்பரம்பாக்கம் ஏரி
6. குடியம் குகைகள்
திருவள்ளுர் மாவட்டத்தில் சுத்தி பாக்க என்ன இருக்கு என்பவர்களிடம் ஷேர் பண்ணி இதெல்லாம் இங்க இருக்குனு சொல்லுங்க
▶ திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில்
▶ திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில்
▶ திருவொற்றியூர் படம்பக்கநாதர் கோயில்
▶ பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில்
▶ கூவம் திரிபுராந்தகர் கோயில்
▶ தி.கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில்
▶ திருத்தணி முருகன் கோயில்
▶ ஸ்ரீ வீரராகவ சுவாமி கோயில்
▶ பவானி தேவி கருமாரியம்மன் கோயில்
▶ பவானி அம்மன் கோயில்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவங்களுக்கு ஷேர் பண்ணுங்க
திருவள்ளூரில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த லிங்கை <
“தொழில் வளா்ச்சியில் சிறந்து விளங்குவதற்கு காரணம் மப்பேடு, ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம், இருங்கக்கோட்டை தொழிற்சாலைகள் தான். ஒரு பெரிய இடத்தில் தொழிற்சாலைகள் கட்டப்படும்போது, அங்குள்ள இடத்தில் 10% சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மரங்கள் நட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூா் விளங்குகிறது” என ஆட்சியா் பிரதாப் பெருமிதம் கொண்டார். மாவட்டத்தின் பெருமையை ஷேர் பண்ணுங்க
ஆந்திராவைச் சேர்ந்த போலீஸ்காரரான சைதன்யாவின் மனைவி பிரியங்கா (31), நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) ஆரணி அடுத்த கொசவன்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு, தனது 10 வயது மகன் உடன் பேருந்தில் சென்றார். பின், ஆரணியில் இருந்து அவரது தங்கை சசிரேகாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (54) கூலி தொழிலாளி. இவர் நேற்று மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியில் கூலி வேலை செய்வதற்காக வந்தபோது, நெஞ்சு வலி இருப்பதாக படுத்திருந்த நிலையில் சிறிது நேரம் கழித்து சக பணியாளர்கள் வேலை செய்ய எழுப்பிய போது சத்தம் இல்லாததால் அவரை பரிசோதித்து பார்த்த போது ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.