India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 044-22321090 (அ) திருவள்ளூர் மாவட்ட அலுவகத்தை (044-27667070) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். *லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க*
LIC நிறுவனம் உதவி நிர்வாக அலுவலர்(பொது), உதவி பொறியாளர், உதவி நிர்வாக அலுவலர்(Chartered Accountant, Company Secretary, Actuarial, Insurance Specialists, Legal) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 850 காலிப்பணியிடங்கள் உள்ளது. இளங்கலை/ பொறியியல் பட்டம் பெற்ற 21-30 வயதிற்குட்பட்டோர் இந்த <
LIC AAO வேலைக்கு முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு உண்டு. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்கள் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவை இல்லை. ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (20/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் 1000 வருட ஜெகந்நாதபெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பிருகு தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வணங்கினால் பாவங்கள் விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. மேலும், இங்கு சிறப்பு பூஜை செய்தால் படிப்பறிவு, அரசு வேலை, வெளிநாட்டு வேலை மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இங்கு சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். திருவள்ளூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-27660120, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441,சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். * பகிருங்கள்* <<17461696>>விபரங்களுக்கு CLICK HERE<<>>
சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை,குழந்தைகளுக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவைகளுக்கு ஆலோசனை பெறலாம். சில வழக்குகளுக்கு (சிவில் / கிரிமினல் / குடும்பம் சார்ந்த) இலவசமாக வழக்கறிஞர் பெறலாம் .நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இரு தரப்பினரும் சமரசம் செய்ய தயாராக இருந்தால், லோக் அடாலட் மூலம் தீர்வு காணலாம். வக்கீல் பீஸ் இல்லாமலே வாதாட முடியும் ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு அரசு ஆன்லைன் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்காக இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம். மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த <
தமிழ்நாடு அரசு இ- ஸ்கூட்டர் மானியம் பெற ஆதார் அட்டை,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கம், நலவாரிய அட்டை போன்றவை தேவை. ஏற்கனவே பெட்ரோல் பைக்குகள் வைத்திருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். *உணவு பொருள் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்கு உதவும் திட்டம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
புழல், காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் காதர் பாஷா. இவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி மனைவி நிலவர் நிஷா அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.கடந்த 10ம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் நிலவர் நிஷா, எண்ணெயை கொதிக்க வைத்து, துாங்கிக் கொண்டிருந்த கணவர் மீது ஊற்றினார். உடல் முழுவதும் வெந்த நிலையில், காதர் பாஷா நேற்று சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.