Thiruvallur

News May 13, 2024

திருவள்ளூர்: டீக்கடையில் கஞ்சா விற்பனை

image

திருத்தணி திருக்குளம் அருகே உள்ள டீக்கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருத்தணி போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதைடுத்து திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரவணன் என்பவரின் டீக்கடையில் ஆய்வுசெய்தனர். அந்த கடையில் ஒரு கிலோ அளவிலான கஞ்சா விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. கஞ்சாவை பறிமுதல்செய்த போலீசார் சரவணனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 12, 2024

முன்னாள் முதலமைச்சர் பிறந்த நாள் கொண்டாட்டம்

image

திருத்தணியில் கமலா திரையரங்கம் அருகில் இன்று அதிமுக கழகப் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 70ஆவது பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் முன்னாள் எம்பி ஹரி அவர்கள். இந்த நிகழ்வில் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

News May 12, 2024

திருவள்ளூரில் நடிகர் தாடி பாலாஜி

image

திருவள்ளூர் தீயணைப்பு நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நீர்மோர் தண்ணீர் பந்தலை நடிகர் தாடி பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி மற்றும் பழங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய், தாடி பாலாஜிக்கு நீண்ட காலம் நெருங்கிய குடும்ப நண்பர் எனவும் நட்பு ரீதியாகவே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் நடிகர் தாடி பாலாஜி கூறினார்.

News May 12, 2024

திருவள்ளூர் அருகே 3 பேர் கைது

image

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு காவல் நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் கடந்த இரு தினங்களுக்கு முன் நிர்வாண நிலையில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வண்புனர்வு செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பாதிரிவேடு போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சூர்யா, சுவேந்தர், ஜெபகுமார் ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர்.

News May 12, 2024

பசுமாட்டிற்கு வளைகாப்பு நடத்தி விருந்து

image

பள்ளிப்பட்டு வட்டம் மேலப்பூடி ஊராட்சியில் உள்ள சொரக்காய்ப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த நெசவாளர் வெங்கடேசன்-செல்வி தம்பதியர் இன்று பசுமாட்டிற்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் இப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெசவாளர் வெங்கடேசன் கூறுகையில், “எனது நீண்ட நாள் ஆசை, எங்கள் வீட்டில் கன்றுக் குட்டியாக இருந்து வளர்த்து வந்த பசுவிற்கு வளைகாப்பு நடத்த ஆசைப்பட்டேன் என்றார்.

News May 12, 2024

ஆந்திரா எல்லையில் தீவிர சோதனை

image

ஆந்திர மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆந்திர மாநில எல்லையில் வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது . வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த செயலில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எல்லையோர டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஆந்திர மாநில முழுவதும் மது கடைகள் மூடப்பட்டுள்ளன.

News May 11, 2024

மீஞ்சூரில் எம்எல்ஏ ஆய்வு

image

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அடிக்கடி ரயில்வே கேட் மூடி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் வந்த நிலையில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அப்போது பேரூராட்சித் தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர் உடன் இருந்தனர்.

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 10, 2024

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அசத்தல் 

image

திருவள்ளூர், வேப்பம்பட்டில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மாணவி மேகலா 496, லஹாரி நாராயணி 486 மற்றும் ஜெபின் ஜோஷ்வா 485 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்கள். 470 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். கணிதத்தில் 10 மாணவர்களும் அறிவியலில் 2 பேரும் சமூக அறிவியலில் ஒருவரும் 100/100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். 

News May 10, 2024

கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

image

பொன்னேரி அடுத்த ஆவூர் எடக்குப்பம் நுக்காளம்மன் திருக்கோயிலில் இன்று காலை கோயிலை பூசாரி திறக்க வந்தபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது சாமி கழுத்திலிருந்த 2 கிராம் நகை, பீரோவில் இருந்த 2 கிராம் தங்க நகை, உண்டியல் உடைக்கப்பட்டு 5000 ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!