India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்கள் 79.49% பேரும், மாணவியர் 90.99% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 85.54% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாநில அளவில் 37வது இடம். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

ஆவடி அருகே அண்ணனூர் பகுதியைச் சேர்ந்த மாதவன் (65), கடந்த பிப்ரவரி மாதம் வீட்டில் மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு, அத்திமணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் (32) என்பவரை 3 மாதங்களாக போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சரவணன் அம்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்த நிலையில், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் இரவு வந்து மேற்கொள்ளும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. விபத்து அவசர காலங்களில் பொதுமக்கள் இந்த எண்களில் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல் தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார்.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதவரம் பால் பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (40). இவர் காதி கிராப்ட் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லோகேஸ்வரி (35). இவர்களது மகள் காவியா (13). இதற்கிடையில் ஜெகநாதன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை ஜெகநாதன் தனது மகன் காவியாவை கொலை செய்து விட்டு, மனைவி லோகேஸ்ரியுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அமைந்துள்ளது அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலின் வைகாசி விசாக விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா எழுந்தருளினார். மாலையில் ரிஷப வாகனத்தில் உற்சவர் பெருமான் எழுந்தருள உள்ளார். தினசரி காலை 7 மற்றும் மாலை 6 மணிக்கு சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருள உள்ளார். மே 25ஆம் தேதி விசாகத் திருவிழா நிறைவு பெறுகிறது.

எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஹம்மது நபில். 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இவர் இன்று காலை ஆவடியில் உள்ள கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பம் வாங்க எண்ணூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது ரயிலில் ஏற முயன்ற ஹம்மது நபில் எதிர்பாராதவிதமாக ரயிலிலிருந்து தவறி விழுந்து தலையில் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி பணியாற்றிவந்தவர் பிரஜேஸ் யாதவ் (33). இவரது சொந்த ஊர் பீகார். இந்நிலையில் நேற்றிரவு பிரஜேஸ் யாதவ் மதுபோதையில் கம்பெனியில் உள்ள மின்சார பெட்டியில் கைவைத்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

திருத்தணி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது புராதன திரவுபதி அம்மன் திருக்கோவில். இந்த கோவிலின் தீமிதி திருவிழா நேற்று மாலை நடந்தது. இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். திருவிழாவை ஒட்டி கோவில் வளாகம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருத்தணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.