India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மாவட்டம் தும்பரம்பேடு கிராமத்தில் பைரவன் மேடு என்ற குன்றின் மேல் ஸ்ரீ மகாகால பைரவர் கோவில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தல விருட்சமாக செம்மரம் உள்ளது. இந்த கோயிலில் வழிப்பட்டால் வேலையும், திருமண பாக்கியமும், நல்ல படிப்பும் கிடைக்கும் என்பது ஐதீகம். *திருமணமாகாத, வேலையில்லாத நண்பர்களுக்கும் பகிரவும்*

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் இங்கு <

திருவள்ளூர் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு இங்கு <

திருவள்ளூர் மாவட்டத்தில் அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று நடைபெற இருந்த கிராம சபைக்கூட்டம் நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது. ஒத்திவைக்கப்பட்ட கிராம சபைக்கூட்டம் அக்.11 அன்று நடைபெறுகிறது என கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராமசபை ஒப்புதல் பெறுதல், சாலைகள் (ம) தெருக்களின் பெயரை மாற்றுதல் குறித்து விவாதிக்கலாம்.

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் நேற்று மாலை கட்டுமான பணியின் போது சாரம் சரிந்த விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தை சேர்ந்த 1 வயது 7 மாதக் குழந்தை சலகண்டக அத்வைதா, ஆசியா மற்றும் இந்திய சாதனை புத்தகங்களில் 2025 இல் இடம்பிடித்து ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். அவர் 5 நிமிடங்கள் 31 வினாடிகளில் 60 சாலை அடையாளங்களை அடையாளம் கண்டது இந்த திருவள்ளூர் மண்ணை சேர்ந்த இளம் மேதை.

பூவிருந்தவல்லி: ஓட்டுனர் இல்லாத ரயிலில் பயணிகளின் பாதுகாப்பிற்காக தடுப்புக்கள் கூடிய ரயில்கள் சென்னை வந்துள்ளன. அடுத்த கட்ட ரயில்களும் விரைவில் சென்னை வரும் என்று தெரிகிறது. பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான ஒரு சிறிய பகுதி முதலில் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க சுமார் 8முதல் 10 தடுப்புக்கள் கூடிய ரயில்கள் தேவைப்படும். இந்த ரயில்கள் வந்த பிறகுதான் சேவை சில வாரங்களில் தொடங்கும்.

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கோரவிபத்து ஏற்பட்டு 4 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கட்டுமான பணியின்போது கம்பிகள் சரிந்து அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in, என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.