India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை (மார்.3) 109 மையங்களில் தொடங்குகிறது. தேர்வை 28,514 மாணவர்கள் எழுதுகின்றனர். பிளஸ் 1 பொதுத்தேர்வுகள், மார்ச் 5 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும். 29,625 மாணவர்கள் பிளஸ் 1 தேர்வுகளை எழுதுகின்றனர். தேர்வுகள் நன்றாக நடைபெற, 24 மணிநேரமும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பிற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பழக்கம் இல்லாத திருவள்ளூரை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக அரசால் ‘DRUG FREE TN’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த செயலியை பொதுமக்கள், மாணவர்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்கள் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டால், ,புகார்களாக பதிவேற்றம் செய்யலாம் என கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2,600 குக்கிராமங்களில், மினி பேருந்துகள் சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, 46 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, 7 முதல் 25 கி.மீ., தூரத்திற்கு மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மின் பேருந்துகளை இயக்க விருப்பம் உள்ளவர்கள் திருவள்ளூர் மாவட்ட இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
பழவேற்காடு ஜமீலாபாத் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காசிம், நிஜாமுதின், அரோன் ஆகியோர் சமையல் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். நேற்று (மார்.1) தேவம்பட்டு பகுதியில் சமையல் வேலையை முடித்துவிட்டு மூவரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கோளூர் கிராமம் அருகே பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடி விபத்துக்குள்ளானது. இதில், அப்துல் காசிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவேற்காட்டில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ள அம்மன் சிலை மரத்தால் செய்யப்பட்டது. ஐப்பசி பவுர்ணமி, வைகாசி விசாகம் போன்ற தினங்களில் இங்கு விஷேஷம். இந்த கோவிலில் வேண்டுதலை மனதில் நினைத்து உண்டியலில் பூட்டு வைத்து வணங்கினால் நிறைவேறும் என்பது ஐதிகம். மேலும், திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் மற்றும் நீண்ட நாள் பிரச்சனை நீங்குமாம். ஷேர் பண்ணுங்க.
தமிழக அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் (Pharmacist) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பார்மசி படிப்பில் டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு, Pharm. D முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
ஆவடி நகர பாமக முன்னாள் செயலாளர் கௌரிவேல் உயிரிழந்தார். அவரது மறைவு அதிர்ச்சி அளிப்பதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். “சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய சிறந்த செயல்வீரர் கௌரிவேல். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து மீளாத் துயரில் வாடும் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.
ராமாபுரம் அடுத்த புட்லூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு அடி வெள்ளி, அம்மாவாசை, பொர்ணமி, மயான கொள்ளை போன்ற தினங்களில் விஷேஷம். இந்த கோவிலில் வேண்டுதலை மனதில் நினைத்து எலுமிச்ச பழத்தை அம்மன் பாதத்தில் வைத்து, அது உருண்டு வந்து முந்தானையில் விழுந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இங்கு வந்தால் குழந்தை பாக்கியம், திருமண தடை, வீட்டில் பிரச்சனை போன்றவை தீருமாம். ஷேர் பண்ணுங்க.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயிலை சேர்ந்த ஏழுமலையின் 11 வயது மகன் சுதர்சன். இவர் பரோட்டா சாப்பிட்ட பின் 2 நாளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலே உயிரிழந்தார். பரோட்டா சாப்பிட்டதால் தான் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.