India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எஸ்.ஐ. போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது. இதில், சிறந்த பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி நடத்தப்படுவதுடன், இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளோர், 96264 56509, 63815 52624 என்ற மொபைல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். *போலீஸ் ஆக துடிக்கும் உங்கள் ஏழை எளிய நண்பர்களுக்கு பகிரவும். கண்டிப்பாக உதவும்*
திருவள்ளூர் ரயில்நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததன் பிறகு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமாக நிற்கின்ற நான்கு பேரில் இருவர் தப்பியோடினர். பிடிக்கப்பட்ட சத்தியமூர்த்தி (26) மற்றும் சூர்யா (21) ஆகியோரிடமிருந்து, 4.5 கிலோ கஞ்சா, இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு உரையாடவும் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த <
திருவாலங்காடு ரயில் நிலையம் தொழுதாவூா் கிராமம் அருகே நேற்று (ஏப்ரல் 25) அதிகாலை மாற்று ரயில் பாதை பகுதிக்கான சிக்னல் வேலை செய்யவில்லை. ரயில்வே பணியாளா்கள் சென்று பார்த்தபோது, விரைவு ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் 2 இடங்களில் பிஷ் பிளேட்டுகள் அகற்றப்பட்டு போல்ட், நட்டுகள் கழற்றப்பட்டிருந்தது. பின்னர், உடனடியாக அவை சரி செய்யப்பட்டது. ரயிலை கவிழ்க்க சதி என்பது தெளிவாக தெரிவதாக அதிகாரிகள் கூறினர்.
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் மற்றும் கேது தோஷம் நீங்கி நிவர்த்தி பெறலாம். ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபான கடைகளும் 01.05.2025 மே தினத்தன்று ஒருநாள் மட்டும் தற்காலிகமாக மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். மேலும் மீறி செயல்படும்ன் உரிமதார்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூரில் ட்ரெக்கிங் பிரியர்களுக்கு ஏற்ற இடமாக குடியம் குகைகள் உள்ளது. வனத்துறை மூலம் அழைத்து செல்லப்படும் இந்த மலையேற்றம் மலையேற்றத்தோடு, தொல்லியல் சின்னங்களை பார்த்த அனுபவத்தை தரும். ஒருவருக்கு ரூ.849 வசூலிக்கப்படும் நிலையில், https://www.trektamilnadu.com என்ற வலைத்தளத்தில் முன்பதிவு செய்து ட்ரெக்கிங் போகலாம். உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணி சம்மர் ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.